ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி: ஜே.என்.யூ., மாணவர்கள் கைது

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (31)
Advertisement
JNU,Students,March,RashtrapatiBhavan,arrest,Police,ஜேஎன்யூ,பல்கலை,மாணவர்கள்,கைது,பேரணி,ஜனாதிபதிமாளிகை

புதுடில்லி: ஜே.என்.யூ., துணைவேந்தரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணி சென்ற, ஜே.என்.யூ., மாணவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களை கைது செய்தனர்.

டில்லியில், உள்ள, ஜே.என்.யூ., எனப்படும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 5ம் தேதி மாலை, முகமூடி அணிந்த சில மர்ம நபர்கள் பல்கலை வளாகம் மற்றும் விடுதிக்குள் நுழைந்து, கண்ணில்பட்ட, மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்களை, உருட்டுக் கட்டை மற்றும் இரும்பு தடிகளால், சரமாரியாக தாக்கினர். இதில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.





இந்நிலையில், இதற்கு பொறுப்பேற்று, ஜே.என்.யூ., துணைவேந்தர் பதவிவிலக வேண்டும் என, அப்பல்கலையின் மாணவர்கள், இன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தினர். இப்பேரணியில், சீதாராம் யெச்சூரி, சரத் யாதவ் உள்ளிட்ட கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். அங்கு அதிகாரிகளுடன் மாணவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.





இதனைதொடர்ந்து, மாணவர்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்த, மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேரணி சென்றவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kalyanaraman - Chennai,இந்தியா
10-ஜன-202016:52:49 IST Report Abuse
R.Kalyanaraman மஹாத்மா காந்தி சுதந்திரம் கிடைத்தவுடன் செய்த பெரிய தவறு நேருவை [ CWC மெஜாரிட்டி சர்தார் படேலுக்கு தான் இருந்த்து] நேருவை பிரதமராக கொண்டுவந்தது. காமராஜர் செய்த பெரிய தவறு இந்திரா காந்தியை பிரதமராக கொண்டு வந்தது , ராஜாஜி செய்த பெரிய தவறு தமிழ் நாட்டில் DMK பர்ட்டியயை சப்போர்ட் செய்து கொண்டுவந்தது. இன்று மக்களுக்கு இவர்களால் பெரிய தொல்லையாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Krish Swam - CHENNAI,இந்தியா
10-ஜன-202013:57:50 IST Report Abuse
Krish Swam பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இளம் வயது சீக்கிய இளைஞர் கொலையால் காங்கிரஸ் மீது இந்திய மக்கலின் கோபத்தை திசைதிருப்பி மறைக்கவே அவர்களே ஏற்படுத்திய நாடகமோ ஜே என் யு தாக்குதல் என என்ன தோன்றுகிறது. இதில் கெஜ்ரிவாலுக்கும் பங்கிருக்கும். எனவே போலீஸ் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி விசாரணை மேற்கொண்டால் உண்மை வெளிவரும். அனைத்து ஆசிரியர்களையும் ஜே என் யு விலிருந்து வேறு கல்லூரிகளுக்கு மாற்றிவிட்டு புதியவர்களை நியமிக்க வேண்டும். போராடும் மாணவர்களை 2 முறை எச்சரித்து 3 முறை பல்கலைக்கழகத்திருந்து வெளியேற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
10-ஜன-202013:09:58 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் படிப்பது என்பதே கிடையாது எந்நேரமும் போராட்டம் மட்டுமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X