பொது செய்தி

இந்தியா

'டி-20' உலக கோப்பையில் தோனி: ரவி சாஸ்திரி

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (3)
Advertisement
Dhoni,MSDhoni,RaviShastri,T20_WorldCup,தோனி,ஓய்வு,உலககோப்பை,ரவிசாஸ்திரி

புதுடில்லி: ''ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் தோனி விளையாட வாய்ப்புள்ளது,'' என, ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி 'சீனியர்' தோனி 38. டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்ற இவர் ஒரு நாள், 'டுவென்டி-20' போட்டிகளில் விளையாடி வருகிறார். கடைசியாக கடந்த ஜூலையில் நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதி போட்டியில் பங்கேற்றார். இதன் பின் எவ்வித போட்டிகளிலும் களமிறங்கவில்லை.





இது குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது: தோனியுடன் 'டிரசிங் ரூமில்' சில விஷயங்கள் குறித்து பேசினேன். இதை வெளியில் தெரிவிக்க முடியாது. இவர் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 38 வயது என்பதால் விரைவில் ஒரு நாள் அரங்கில் இருந்தும் விடை பெறலாம்.'டுவென்டி-20' போட்டியில் மட்டுமே தொடர்ந்து விளையாட தோனி விரும்பலாம். ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்று உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என கணிக்கலாம். இதில் சிறப்பாக செயல்பட்டால், ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'டுவென்டி-20' உலக கோப்பையில் (அக். 18- நவ. 15) விளையாட வாய்ப்புள்ளது.





டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைப்பது முட்டாள்தனமானது. அவசியம் ஏற்பட்டால், தரவரிசையில் 'டாப்-6' இடங்களில் இருக்கும் அணிகள் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்டில் விளையாடலாம். மற்ற அணிகள் நான்கு நாட்களில் பங்கேற்க அனுமதி தரலாம். டெஸ்ட் போட்டியை விறுவிறுப்பாக மாற்ற எண்ணினால், 'டாப்-6' அணிகளை மட்டும் மோத வைக்கலாம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meenakshi - Chennai,இந்தியா
10-ஜன-202014:02:40 IST Report Abuse
Meenakshi தோணி வராததற்கு காரணமே இந்த ரவி சாஸ்திரி தான்... பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆடுகிறான்
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
10-ஜன-202011:44:57 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை விளங்கிடும். இவர் சென்னை அணியின் தலைவரா இருந்தப்போதான் கோர்ட் சென்னை அணியை ஊழல் அணின்னு 2 வருடம் தடை விதித்தது.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-ஜன-202004:19:29 IST Report Abuse
J.V. Iyer தோணி அடையவேண்டிய வெற்றிகளை, உயரத்தை அடைந்துவிட்டார். ஒருசில தமிழ் நடிகர்கள்போல அறுவது, எழுவது வயதுகளில் இவரை கிரிக்கெட் ஆடச்சொல்வது நன்றாக இல்லை. ரவி சாஸ்திரிக்கு பதில் இவரை மானேஜராக அனுப்பலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X