சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

உழைக்காமல் ஊதியம் வாங்கும், ஓ.பி., ஊழியர்கள்!

Added : ஜன 09, 2020 | கருத்துகள் (4)
Advertisement
 உழைக்காமல் ஊதியம் வாங்கும், ஓ.பி., ஊழியர்கள்!

''கோவில் அதிகாரியை தாறுமாறா திட்டியிருக்கார் ஓய்...'' என, முதல் தகவலை ஆரம்பித்தார், குப்பண்ணா.

''எந்தக் கோவில் விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு, 6ம் தேதி நடந்துதோல்லியோ... இதுக்கு, கோவில் சார்புல, கட்டண பாஸ்கள் விற்பனை செய்தா ஓய்... ''அதே நேரம், இந்த பாஸ்களை, மாவட்டத்துல இருக்கற முக்கிய பிரமுகர்களுக்கு இலவசமா தருவா... அந்த வகையில, முக்கிய பிரமுகர் ஒருத்தரின் மகன், 200க்கும் மேற்பட்ட பாஸ்கள் வேணும்னு கேட்டிருக்கார் ஓய்...

''கோவில் உயர் அதிகாரி, 'அவ்வளவு தர முடியாது'ன்னு மறுக்க, பிரமுகரின் மகன், அவரை தரக்குறைவா தாறுமாறா திட்டியிருக்கார்... அதிர்ச்சியான அதிகாரி, அவர் கேட்ட பாஸ்களை குடுத்து அனுப்பிட்டார்... ''இது, கோவில் நிர்வாகிகளுக்கு தெரிஞ்சு, வி.ஐ.பி., மகன் மேல கடுப்புல இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணா, ''ஜவஹர் தள்ளி உட்காருங்கோ... கீழே வெல்லம் சிந்தியிருக்கு பாருங்கோ...'' என, நண்பரை எச்சரித்தார்.

''எல்லாருக்கும் கடிதாசி போட்டு பாராட்டிட்டாருல்லா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''யாரு, யாருக்குங்க கடிதம் போட்டது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சட்டம் - ஒழுங்கு, நிர்வாகம் உட்பட பல துறைகள்ல, தேசிய அளவுல, தமிழகம் முதலிடம் பிடிச்சிருக்குல்லா... இதனால, குஷியான முதல்வர், போலீஸ் துறையை பாராட்டி, டி.ஜி.பி., திரிபாதிக்கு கடிதம் எழுதினாரு வே... ''டி.ஜி.பி.,யும், அனைத்து கமிஷனர்கள், எஸ்.பி.,க்களுக்கு தனித்தனியே கடிதம் எழுதியிருக்காரு... அதுல, 'இது, நமக்கு பெருமையான விஷயம்... மக்களுக்கு தொடர்ந்து சிறந்த சேவையை வழங்கி, முதலிடத்தை தக்க வச்சுக்கணும்'னு குறிப்பிட்டு, அதுலயே, முதல்வர் கடிதத்தின் நகலையும் இணைச்சு அனுப்பியிருக்காரு...

''அதோட, 'இந்த கடிதத்தை, எல்லாரும் பார்க்கும்படி, அலுவலக நோட்டீஸ் போர்டுல ஒட்டி வைங்க'ன்னும் உத்தரவு போட்டிருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.

''உழைக்காம கிடைக்கிற காசு உடம்புல ஒட்டுமாங்க...'' என, திடீரென கேட்டார், அந்தோணிசாமி.

''லவலேசமும் ஒட்டாது... என்ன விவகாரம்னு சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''அரசு போக்குவரத்துக் கழகத்தின், கோவை கோட்டத்துல, 45 டிப்போக்கள் இருக்கு... இங்க, ஆளுங்கட்சி தொழிற்சங்கத்துல இருக்கிற டிரைவர், கண்டக்டர், மெக்கானிக்கல் பிரிவு தொழிலாளர்கள் சிலர், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, அலுவலக பணிக்கு மாறி, சீட்டை தேய்ச்சிட்டு இருக்காங்க...

''இந்த மாதிரி, ஒவ்வொரு டிப்போவுலயும், குறைஞ்சது, அஞ்சாறு பேராவது, வேலை செய்யாம, ஓ.பி., அடிச்சிட்டு, சம்பளத்தை மட்டும் சுளையா வாங்கிடுறாங்க... அதே நேரம், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்னு பல பிரிவுகள்ல, ஆட்கள் இல்லாம வேலைகள் பாதிக்கப்படுதுங்க... அங்க இருக்கிறவங்க வார விடுப்பு, அவசர விடுப்பு எடுக்க முடியாம சிரமப்படுறாங்க...'' என, முடித்து எழுந்தார், அந்தோணிசாமி.

மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
10-ஜன-202014:02:11 IST Report Abuse
s.rajagopalan அந்த ஆளுக்கு ரங்கநாதர் நல்ல 'பிரசாதம்' கொடுப்பார்
Rate this:
Share this comment
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
10-ஜன-202012:29:37 IST Report Abuse
Dr. Suriya இது எல்லா ஆட்சிளையும்தான் நடக்குது... தி மு க ஆட்சியில் தொ மு ச ஊழியர்கள் இப்படித்தான் இருந்தார்கள்...ஏன் அவர்களை போராட சொல்லுங்களேன்....
Rate this:
Share this comment
Cancel
A R J U N - sennai ,யூ.எஸ்.ஏ
10-ஜன-202007:55:27 IST Report Abuse
A R J U N ஜவஹர் மாதிரி ஓசில கெடச்சா ஒம வாட்டரை கூட ஒன்பதுதடவ குடிப்பாங்க,பிரீ ன்னா பினாயில்கூட குடிப்பாங்க. இந்த சங்க செய்தி இன்று நேற்றல்ல 1970 லலிலேயே நடைமுறையில் இருக்கு,இந்திய மருத்துவ பிரிவில் மருந்து செய் பிரிவில் சங்க உறுப்பினர்கள் SCOOT அடிப்பது வழக்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X