அஹிம்சை வழியில் போராட்டம்

Added : ஜன 09, 2020
Advertisement
 அஹிம்சை வழியில் போராட்டம்

மத்திய அரசின் சர்வாதிகாரத்தை எதிர்த்து, மஹாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழியில் போராட்டம் நடத்த வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால், நாட்டில், ஒரு பிரிவு மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. நாம், முகாமில் தங்க வேண்டியிருக்குமோ என, மக்கள் பயப்படுகின்றனர். அரசை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில், வன்முறைக்கு இடம் அளிக்க கூடாது. அஹிம்சை என்கிற சக்தி வாய்ந்த ஆயுதத்தை பயன்படுத்தி, வெற்றி காண வேண்டும்.

சரத் பவார்தலைவர், தேசியவாத காங்.,

உறுதியான நடவடிக்கை இல்லை

நாட்டின் பொருளாதாரச் சூழல் சரியில்லை என்பதை, உள்நாட்டு மொத்த உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பொருளாதார வளர்ச்சிக்குறைவு, வர்த்தகர்கள், ஏழைகள், தினசரி கூலி வேலைக்குச் செல்வோர், மாத ஊதியம் பெறுவோர், தொழிலாளர்கள் ஆகியோரை கடுமையாகப் பாதிக்கும். இந்த சிக்கலைத் தீர்க்க, மத்திய அரசு சார்பில், உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பிரியங்கா, பொதுச் செயலர், காங்.,

சிறிதும் வாய்ப்பு இல்லை

ராஜ் தாக்கரேவின், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியுடன், பா.ஜ., கூட்டணி அமைக்க, சிறிதும் வாய்ப்பு இல்லை. இரண்டு கட்சிகளும், கொள்கை அளவில் வேறுபாடு கொண்டுள்ளன. அதனால், ராஜ்தாக்கரேவுடன், பா.ஜ., கைகோர்க்க முடியாது. எதிர்காலத்தில், அவர்களின் நிலையில் மாற்றம் ஏற்பட்டால், கூட்டணி அமைப்பது பற்றி யோசிப்போம்.

தேவேந்திர பட்னவிஸ், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X