சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

தேறுமா சிவசேனா - காங்., கூட்டணி?

Added : ஜன 09, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 தேறுமா சிவசேனா - காங்., கூட்டணி?

மஹாராஷ்டிராவில், சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையில் கடந்த மாதம், அமைச்சரவை பதவி ஏற்றது.நெடுங்கால பகையாய் இருந்தவர்கள், எப்படி ஒன்று சேர்ந்தனர் என்ற ஆச்சரியத்தில் அனைவரும் இருந்தனர்.

இவர்களின் ஆச்சரியத்தை தவிடுபொடியாக்கும் வகையில், இரு கட்சியினருக்கும் இடையே சமீப காலமாக, பழையபடி சண்டை துவங்கி விட்டது. 'உத்தவ் தாக்கரே கொடுத்த பதவி எனக்குப் பிடிக்கவில்லை' என்பதில் துவங்கி, 'பதவியே கொடுக்கவில்லை' என்பது வரை, பல பிரச்னைகளை காங்கிரஸ் கட்சியினர் வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து சிவசேனா கட்சியினர் கூறுகையில், 'பிரச்னைகளைப் பேசித் தீர்ப்போம்' என்கின்றனர்.

காங்., கட்சியினரோ, 'எப்படி தீர்ப்பது? முதலில் மஹாராஷ்டிராவில் உள்ள எங்கள் தலைமை சரியில்லை. ஜூனியர்களுக்கெல்லாம் பதவி வாங்கிக் கொடுத்து விட்டார். சீனியர்கள் என்ன இளிச்சவாயர்களா... தலைமை மாறட்டும். அதுக்கப்புறம் தான் எல்லாம்...' என்கின்றனர். விஷயம், சோனியா காது வரை போக, இப்போது, மல்லிகார்ஜுன கார்கேயை களமிறக்குகிறார் சோனியா.

நம்பிக்கை துரோகத்தில் சிக்கித் தவிக்கும், பா.ஜ.,வோ, 'பார்ப்போம், நடக்கப் போகும் நாடகத்தை...' என, எள்ளி நகைக்கிறது!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajavel - Ariyalur,இந்தியா
10-ஜன-202004:48:57 IST Report Abuse
Rajavel பிஹாரில் பிஜேபி செய்ததற்கு பெயர் என்ன ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X