'பிளாஸ்டிக் பேனர்' வழக்கு சுப்ரீம் கோர்ட், 'நோட்டீஸ்'

Added : ஜன 09, 2020 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி: தேர்தல் சமயத்தில், 'பிளாஸ்டிக் பேனர்'களை பயன்படுத்துவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், மத்திய சுற்றுச் சூழல், வனத்துறை அமைச்சகங்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

தேர்தல் சமயத்தில், நாடு முழுவதும், பிளாஸ்டிக் பேனர்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை தடை செய்யக்கோரி, என்.ஜி.டி., எனப்படும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், எட்வின் வில்சன் என்பவர் முறையிட்டார்.அவர் மனு மீது விசாரணை நடத்தி, தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. 'தேர்தலின் போது பிளாஸ்டிக்கால் ஆன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்' என, இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவில் திருப்தியடையாத மனுதாரர் எட்வின் வில்சன், உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், 'பெரும் அச்சுறுத்தலை விளைவிக்கும், பிளாஸ்டிக் பேனர்களை தடை செய்ய வேண்டும் என்ற வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயம், தீர்க்கமான உத்தரவை பிறப்பிக்கவில்லை. 'தேர்தல் முடிந்த பிறகு, கழிவுகளாக எறியப்படும் அந்த பிளாஸ்டிக் பேனர்களால், சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு நேரும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.வில்சனின் மனுவை ஏற்ற, உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகங்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, நோட்டீஸ் அனுப்பி, நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
10-ஜன-202021:41:07 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN எந்த மனிதன் நேர்மையாக சுயநலமின்றி பாடுபட உழைக்க நினைக்கிறான். ஊலில் சம்பாதித்த பணத்தை வெளி நாடுகளில் சேமிக்கிறான் என்றால் பாருங்களேன். கோர்ட் வர வர அரசு நிர்வாகம் செய்ய ஆரம்பித்து விட்டது பொல் உள்ளது. மக்களாட்சியில் ஓட்டுக்கு (வாக்குக்கு) பணம் பெற்று க்கொண்டு போடும் மக்களிடம் எந்த சட்டத்தையும் செயல்படுத்த முடியவே முடியாதுங்க. ஏன்னா எல்லோரும் முதல்வராக மந்திரியாக விருப்பும் காலமுங்க இது எனவே மக்களாட்சி இனி அவசியமில்லை என தோன்றுகிறது. மூடர்கள் அதிகம் பெருகி விட்டனர் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X