பொது செய்தி

தமிழ்நாடு

சந்தனம் களைந்த மரகத நடராஜர் தரிசனம்: உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா

Added : ஜன 09, 2020
Advertisement
 சந்தனம் களைந்த மரகத நடராஜர் தரிசனம்:  உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா

ராமநாதபுரம்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று உத்தரகோசமங்கையில், பச்சை மரகத நடராஜரின் சந்தன காப்பு களையப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன், மங்களநாத சுவாமி கோவில், மாணிக்க வாசகரால், பாடல் பெற்ற சிவாலயம். இந்த கோவில் பிரகாரத்தில், தெற்கு நோக்கி அமைந்த சன்னிதியில், பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. ஒலி, ஒளி அதிர்வுகளால் பாதிப்பு ஏற்படாமலிருக்க, ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிட்டு, மரகத நடராஜர் காட்சி தருகிறார். ஆருத்ரா தரிசனத்திற்காக, ஆண்டிற்கு ஒருமுறை மட்டும், மரகத நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டு, புதிய சந்தனம் பூசப்படும்.இதன்படி, நேற்று காலை, 9:00 மணிக்கு சந்தனம் களையப்பட்டது. மற்ற, 364 நாட்களும் மரகத, ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேக, ஆராதனை நடக்கும்.நேற்று காலை, 10:30 மணி முதல், சந்தனம் களையப்பட்ட மூலவர் மரகத நடராஜர், சிவகாமி அம்மனுக்கு, 31 வகையான அபிஷேகங்கள் நடந்தன. பின், சந்தனம் முதலான தைலங்கள் பூசப்பட்டன.கரும்பச்சை நிறத்தில் மூலவர் காணப்பட்டார். ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர்.

இரவு, 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடந்தது. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு கல் தேர் மண்டபத்தில், கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.சூரிய உதயத்தில், ஆருத்ரா தரிசனம் நடத்தப்பட்டு, மரகத நடராஜர் திருமேனியில் புதிய சந்தனம் பூசி, மலர்களால் அலங்கரிங்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று இரவு, 8:00 மணிக்கு மாணிக்கவாசகருக்கு சுவாமி காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X