சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜன 09, 2020
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் அவர்களை, தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர். நீங்கள் சொல்லித் தான், புதிதாக அறிய வேண்டும் என்பதில்லை...' என, சொல்ல வைக்கும் வகையில், பா.ஜ., தேசிய செயலர் முரளிதர ராவ் பேட்டி: குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும், சிறுபான்மையின மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். அவர்களால் தான், தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

'பெண்கள், சிறுமியருக்கு படிப்புடன் துப்பாக்கி சுடுதல், கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொடுத்தால் தான் ஆச்சு...' என, கூற வைக்கும் வகையில், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு: சென்னையில் மட்டும், கடந்த எட்டாண்டுகளில், பெண்கள், சிறுமியர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக, 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, உறுதுணையாக இருக்கும் சட்டங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

'ஒரு பெண்ணான உங்களை, தாக்கியது கோழைத்தனம் மற்றும் தவறு தான். எனினும், 30 பேர் தாக்கினர் என்கிறீர்கள்; ஐந்து தையல் தானே, நெற்றியில் போட்டுள்ளீர்கள்; எங்கள் மாநிலத்தின் சில அரசியல் தலைவர்கள் போல, மிகைபடுத்தி கூறுகிறீர்களோ...' என, சந்தேகத்தை கிளப்பும் வகையில், டில்லி, ஜே.என்., பல்கலைக்கழக மாணவர் தலைவர் அய்ஷே கோஷ் பேட்டி: எங்கள் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த குண்டர்களில், 30 பேர் என்னை தனியாக பிரித்து, கைகளில் இருந்த இரும்பு கம்பிகளால் பலம் கொண்ட மட்டும் தாக்கினர். இதில் நான் பலத்த காயமடைந்தேன்.

'இதுவரை நீங்கள், மக்களை வழிநடத்தியது போலவா...' என, கிடுக்கி போடும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை:மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, பாசிசத்தை நோக்கி குதிரை போல அதிவேகமாக செல்கிறது. பாசிச கொள்கைக்கு நாட்டில் இடமில்லை. எனவே, நாட்டின் நலன் மீது அக்கறை கொண்ட அனைத்து தலைவர்களும், மக்களை வழிநடத்த தயாராக வேண்டும்.

'புதுக்கதையாக இருக்கே... ஹிட்லர் ஆட்சியில், எதிர்க்கட்சிகளே கிடையாது; அவரை எதிர்த்து யாரும் பேச முடியாது தெரியுமா...' என, நினைவுபடுத்த தோன்றும் வகையில், சத்தீஸ்கர் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் பேட்டி:பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், மக்களை பல விதங்களில் கஷ்டப்படுத்தி வருகின்றனர். ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லர் போல, மோடி ஆட்சி செய்கிறார். முன்பு உலகை சுற்றிய மோடி, இப்போது எங்கும் செல்வதில்லை; பிற நாட்டுத் தலைவர்களும், இந்தியாவுக்கு வருவதில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X