சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கால்டாக்சி' நிறுவனம் துவக்குவதாக மோசடி

Added : ஜன 09, 2020
Advertisement

சென்னை: தமிழகத்தில், கால்டாக்சி நிறுவனம் துவக்குவதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, ஒரு பெண் உட்பட, மூன்று பேர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் மணிராஜ். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார்:தமிழகத்தில், ஊபர், ஓலா போன்று, 'டாக்சி' என்ற பெயரில், 'கால்டாக்சி' நிறுவனம் துவக்க இருப்பதாகவும், அதில் முகவர்களாக சேர விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும், இணைய தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.அதிலிருந்த, மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டேன். சென்னை, அண்ணா நகரில் அலுவலகம் இருப்பதாக தெரிவித்தனர். அங்கு சென்று, அசோகன், சுஜாதா மற்றும் கார்த்திக் ஆகியோரை சந்தித்தேன்.முகவராக சேர, முன் பணமாக, 2 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றனர்.

சொந்த ஊருக்கு சென்ற பின், கடன் வாங்கி அந்த தொகையை செலுத்தினேன். அதன்பின், அசோகன் உள்ளிட்ட மூவரும், என்னை தொடர்பு கொள்ளவில்லை; புதிய நிறுவனத்தையும் துவக்கவில்லை.இதனால், அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. சென்னைக்கு வந்து பார்த்தபோது, அவர்கள் நடத்தி வந்த அலுவலகம் பூட்டிக் கிடந்தது. அசோகன் உள்ளிட்ட மூவரும், என் போன்று, பலரிடம், 1 கோடி ரூபாய்க்கு மேலாக மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X