கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு கோரி மனு

Added : ஜன 09, 2020
Advertisement

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த, என்.முருகேசன் தாக்கல் செய்த மனு:தமிழக மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, ௫,௪௦௦ இடங்கள் இருந்தும், தமிழ் வழியில் படித்தவர்களில், 5 சதவீதம் பேருக்கு கூட, இடம் கிடைக்கவில்லை.கர்நாடக அரசு, கன்னட மொழியில் படிப்பவர்களுக்கு, 5 சதவீத இடங்களை, மருத்துவ கல்லுாரிகளில் ஒதுக்கி உள்ளது.

அதேபோல், தெலுங்கானா மாநிலத்திலும், ஒதுக்கீடு உள்ளது. எனவே, குறைந்தபட்சமாக, 5 சதவீத இடங்களை, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கும்படி, அரசுக்கு மனு அனுப்பினேன்.என் மனுவை பரிசீலித்து, தமிழ் வழியில் படித்து, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில், 5 சதவீத இடங்களை ஒதுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, சுகாதாரத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, பிப்., ௨௦க்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X