பொது செய்தி

இந்தியா

பாக்.,கின் பொய் பிரசாரம் பலிக்காது: காஷ்மீரில் ஆய்வு செய்த வெளிநாட்டு தூதர்கள்

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (28)
Advertisement
kashmir,issue,Pakistan,வெளிநாட்டுதூதர்கள், பாக்.,  பொய்பிரசாரம், காஷ்மீர்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 370 ஆவது சட்டபிரிவின் படி அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை நேரில் ஆய்வு செய்ய வெளிநாட்டு தூதர்கள் 16 பேர் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் அங்கு வருகை தந்தனர்.

ஸ்ரீநகரில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்ட அவர்களை, உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் சந்தித்தனர். அப்போது அவர்கள் தூதர்கள் மற்றும் அதிகாரிகளிடம், காஷ்மீர் குறித்து பாக்., பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்வதாக குற்றம் சாட்டினர். ஜம்மு காஷ்மீரில் வன்முறையை பரப்புவதற்கு பாக்., வெகுவாக முயற்சித்தது, ஆனால் அது முடியாமல் போனதால் அது விரக்தியடைந்துள்ளது. காஷ்மீரில் இருந்து ஒரு அங்குல நிலத்தை கூட பாகிஸ்தானால் பறிக்க முடியாது என்று அவர்கள் தூதர்களிடம் தெரிவித்தனர். இதை பாக்கிடம் எடுத்துச் சொல்லும் படி அவர்கள் கோரிக்கை வைத்தனர்

அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் ((Kenneth Juster)), தென்கொரிய தூதுவர் ஷின் போங் கில் ((Shin Bong-kil)0, நார்வே தூதுவர் ஹான்ஸ் ஜேக்கப் ஃபிரைடெலுன்ட் ((Hans Jacob Frydenlund)), மற்றும் நார்வே, வியட்நாம், அர்ஜென்டினா உள்ளிட்ட பல நாடுகளின் தூதர்களும் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Dammam,சவுதி அரேபியா
13-ஜன-202016:22:48 IST Report Abuse
Mano காஸ்மீர் மக்களுக்கு நன்றி. ஜெயஹிந்த்து
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
10-ஜன-202014:45:22 IST Report Abuse
elakkumanan ஹலோ தூதர்ஸ் , நீங்களெல்லாம் தூதர்ஸ் தாணு எப்புடி நம்புறது? உங்க நாட்டுல குடுத்த ஐ டி கார்டு இருக்கா? உங்க நாட்டுல கொடுத்ததை ஏற்கமுடியாது..................இந்தியன் கவர்ன்மெண்ட் கொடுத்த அட்டை ...............அதெல்லாம் செல்லவே செல்லாது. இந்தியாவில் கொடுத்த இட ஒதுக்கீடு, இலவச சலுகைகள் தவிர எதுவுமே செல்லாது .......................அப்போ, என்னதான் ஆதாரம் கேக்குறீங்க பாஸூ ......................பக்கத்துக்கு நாட்டுல இருந்து யாராவது தூதர்ஸ் வந்திருக்கீங்களா? பாஸூ, நாங்க எல்லாம் ஐரோப்பா பாஸூ .........அப்பிடியா? இதை மோதவே சொல்லியிருக்கலாம்ல ....................... அப்போ, நாங்க சொன்னதை எதுக்குவீங்களா? .............பக்கதுநாட்டை சேர்ந்த யாருமே இல்லாததால், இந்த தூதர்ஸ் குழுவே போலி,.என்பதுதான் எங்கள் முடிவு................பாஸூ, நாங்க உண்மையிலேயே நெசம்தான் சொல்றோம் பாஸூ..............டேய், இந்த தூதர்ஸ் கூட்டத்தை ஒரு ரூமுக்குள்ள போட்டு மூடு. நம்ம ஆளுக யாரவது வந்து இவனுகளை தூதர்ஸ்ன்னு சொன்னா, தொறந்து , தொரத்தி விடு.......பேட்டி கொடுக்க கூடாதுனு சொல்லி, தொரத்தி விடு................பேட்டி கொடுத்தா, பேட்டியும், நீயும் வெளிய வரமுடியாதுன்னு சொல்லுடா...............ஒரு சனநாயக நாட்டில், இப்பிடி ஒரு தூதர்ஸ் கூட்டத்தை வச்சு மோடி அக்கிரமம் பண்ணுறார்னு நம்ம டிவி ல போடுடா. சனநாயகத்தின் பலத்தை மோடிக்கு காட்டுவோம் ..............வாழ்க சனநாயகம்.................மோடி ஒழிக ...........................எல்லா டிவி , பேப்பரில் போடு டா. ................மோடி யின் ஏமாற்றும் முயற்சி முறியடிப்பு ............... இதுதாண்டா தலைப்பு.............போடுடா................. நம்ம ஊரு சனநாயகம் இப்பிடித்தான் இருக்கு.......
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
10-ஜன-202014:19:51 IST Report Abuse
spr ஏதோ ஒரு தமிழ் படத்தில், "கற்புக்கரசி யார் என்று கேட்டால் நளாயினி, கண்ணகி என்றெல்லாம் சொல்பவன், ஒருத்தர் கூட அது என் மனைவி, தாய் சகோதரி என்று சொல்வதில்லையே ஏன்?" அது கூட பிறர் சொல்லித்தான் அறியப்பட வேண்டுமா? அது போல காஷ்மீர் விஷயத்தை, இந்தியா நேர்மையாக நடந்து கொண்டிருக்கிறது என்பதனைக் கூட வெளிநாட்டார் சொல்லித்தான் நம் ஊடகங்களும் செய்தித்தாள்களும், ஏன் நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X