சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

திருடனிடம் சாவியை கொடுத்த கதை தான்!

Added : ஜன 09, 2020 | கருத்துகள் (2)
Advertisement
திருடனிடம் சாவியை கொடுத்த கதை தான்!

புலவர் சுப்பு லட்சுமணன், மாவட்ட கல்வி அலுவலர் (பணி நிறைவு), பீர்க்கன்காரணை, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:'நிடி ஆயோக்' என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், உலக அளவில், 107 நாடுகள், பட்டினியின் கொடுமையால் வாடுவதாக தெரிவித்துள்ளது. அதில், இந்தியா, 102ம் இடத்தில் உள்ளது. அந்நிறுவனம், 'இந்திய மக்களிடம் சத்துணவு குறைபாடு மிகுதியாக உள்ளது' என, தெரிவித்துள்ளது. இதற்கு, புரதச்சத்து மிக்க மீன், முட்டை, இறைச்சியை, ரேஷன் கடைகள் வாயிலாக, மக்களுக்கு வழங்க அறிவுறுத்தியுள்ளது.

அதை ஏற்ற, மத்திய அரசு, உணவுப் பங்கீட்டுக் கடைகளின் மூலம், ரேஷன் கடைகளில், புலால் உணவை விற்க முடிவு செய்துள்ளதாக, ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த திட்டம், நடைமுறைக்கு ஒத்து வருமா என்பதை சிந்திக்க வேண்டும். மக்களில், 30 விழுக்காட்டினர் இறைச்சி உணவு உண்பதில்லை. அதிலும், மிகுதியான மக்கள், அந்த மணத்தை வெறுப்போர். அனைத்து ஜாதியினரும் செல்லும் ரேஷன் கடைகளில், இவற்றை விற்பனை செய்வது சரிதானா?

மீன் இறைச்சியை, ரேஷன் ஊழியர்கள் எப்படிக் கொள்முதல் செய்வர். ஊழல் மலிந்த கடத்தல் மிகுந்த இந்த துறையினர், இவற்றை கொள்முதல் செய்வதில் தவறு நேராதா... லாரியில் மூட்டை மூட்டையாக அரிசி கடத்துகின்றனர். உணவுப் பொருள் பாதுகாப்பு கிடங்கு மண்டல மேலாளர், அதன் பொறுப்பாளருக்கு தெரியாமல், லாரியில் அரிசி மூட்டை கடத்த முடியாது; அரசியல் குறுக்கீடு உள்ளது. ஊழல் மிகுந்த துறையில், விலை மதிக்க முடியாத, இறைச்சி உணவை எப்படிக் கையாளுவர்.

இறைச்சி உணவு வழங்க, தனி ஆள் பணியில் அமர்த்த வேண்டும். அதை, சீனி, கோதுமை உள்ளிட்ட மற்ற உணவு பொருட்கள் வைக்கும் இடத்தில் வைக்க முடியாது. இறைச்சிக்கு, தனி இடம், குளிர்சாதனம் தேவை. எஞ்சிய மீன், இறைச்சியை, மறுநாள் மக்கள் வாங்குவரா, அப்பொருளுக்கு எப்படிக் கணக்கு எழுதுவர்; இது, திருடனிடம் திறவுகோலையும் கொடுத்த கதை தான். இதனால், அரசுக்கு கூடுதல் செலவாகும்.

சும்மாவே மிரட்டி, சிறு ரேஷன்கடையில் பணம் பெறும் மேலாய்வாளர், இறைச்சிகளையும் விற்றால், அவர்கள் கை ஓங்கி விடும்; அரசே, தவறு செய்ய வழி வகுத்ததாகி விடும். பொதுமக்களுக்கும் பயன் இல்லை; அரசுக்கும் கூடுதல் செலவு; ஊழல் செய்வோருக்கு பாடு கொண்டாட்டம். எனவே, மக்கள் விரும்பாத நிலையில் புலால் உணவாகிய மீன், முட்டை, இறைச்சியை உணவு வழங்கல் கடைகளில் விற்பனை செய்வதை, அரசு ஆராய்ந்து செய்ய வேண்டும்!

***


இன்னமும் பின் தங்கி உள்ளோமே!

பொன்.சம்பந்தன், திருவள்ளூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜனநாயகம் தழைக்க, தேர்தல் முக்கியம். அதில், ஓட்டளிப்பது, அனைவரின் கடமை. இதற்காக, தேர்தல் ஆணையம் மற்றும் அரசும் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால், நாம் இன்னமும் பின் தங்கி தான் உள்ளோம் என்பதற்கு, சாலை வசதி இல்லாதது சாட்சிகளாக உள்ளன. விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. ஆனால், தேனி மாவட்டம், போடி ஒன்றியம், கொட்டக்குடி, அகமலை ஊராட்சி மலை கிராமங்களுக்கு செல்ல, சாலை வசதி இல்லை. அதனால், உள்ளாட்சி தேர்தலுக்கான, ஓட்டுப்பெட்டிகளை குதிரைகள் மீது ஏற்றி, பாதுகாப்புடன், மலைப் பாதையில் கொண்டு செல்லப்பட்டன.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, ஊரடி ஊத்துக்காட்டு ஊராட்சிக்கு, குதிரைகள் வாயிலாக, 8 கி.மீ., ஓட்டுப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. ஓட்டுச்சாவடி மையத்தில் பணியாற்றுவோரும், மலைப்பாதையில் நடந்தே சென்றுள்ளனர். போடி ஒன்றியம், கொட்டக்குடி ஊராட்சியின், 'டாப் ஸ்டேஷன்' மலைப் பகுதிக்கு செல்ல, குரங்கனி வழியாக, 40 கி.மீ., கரடு முரடான ஒற்றைய சாலையில் தான் செல்ல வேண்டும். அதனால், கேரளா மாநிலம், மூணாறு வழியாக, 103 கி.மீ., ஜீப்பில் ஓட்டுப்பெட்டிகள் மற்றும் அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பன ஷள்ளி ஒன்றியம், ஏக்கள் நத்தம் மலை கிராமத்திற்கு, 4.6 கி.மீ., கரடு முரடான சாலையில் நடந்து தான் செல்ல வேண்டும். மூன்று பெண் அலுவலர்கள் உட்பட, 15 பேர், ஓட்டுப் பெட்டிகளுடன் நடந்தே சென்றனர். இந்த மலைக் கிராமங்களுக்கு, ஓட்டுப்பெட்டிகள், தேவையான பொருட்கள், ஆட்கள், போலீசாரை, ஹெலிகாப்டர் வாயிலாக அனுப்பலாமே! அந்தந்த ஊராட்சிகளில், குறிப்பிட்ட உயரத்தில் இருந்து, வானில் ஹெலிகாப்டரிலிருந்து, கயிறு, ஏணிகள் வாயிலாக, மிகவும் பத்திரமாக இறக்கி விடலாமே! இதனால், அலுவலர்களுக்கு பதற்றமோ, உடல் இம்சைகளோ இருக்காது!

***


மக்களிடம் தோலுரித்து காட்டினால் தி.மு.க., வரவே வராது!

கு.காந்திராஜா, - எண்ணுார், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, கடுமையான பொய் பிரசாரங்கள், தி.மு.க.,வால் மேற்கொள்ளப்பட்டன. அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக, மக்களிடையே, கோபத்தை துாண்டி விட பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

'அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க மாட்டோம்' என ஜமாத்துகளில், முடிவெடுத்து, இஸ்லாமியர்கள் அறிவித்தனர். பா.ஜ., கூட்டணி வைத்திருப்பதால், கிறிஸ்துவர்களும், 'அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்கக் கூடாது' என, மத உணர்வின் அடிப்படையில், கிராம அளவில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்தருணத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க., கூட்டணியை விட, மிகச் சிறிய அளவிலேயே கூடுதல் இடங்களைப் தி.மு.க., கூட்டணி பெற்று இருக்கிறது.

ஜெயலலிதா மறைவிற்கு பின் நடந்த, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சுத்தமாக துடைத்தெறியப்பட்டது. அதன் பின் நடைபெற்ற, இரண்டு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பெற்ற வெற்றி, தமிழகத்தில் மீண்டும் ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்திருக்கிறது. இப்போதைய, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், அதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தலைமையில், அ.தி.மு.க., மீண்டும் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், தி.மு.க., கூட்டணிக்கு ஒரளவு அதிக இடங்களை கொடுத்துள்ள போதிலும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியின் வெற்றியே பிரமிக்க வைக்கிறது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகளே வெற்றி பெற்று, சாதித்துக் காட்டி இருக்கின்றன. அ.தி.மு.க., கூட்டணி, இப்படியே தொடர்ந்தால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும், நல்ல வெற்றியை குவிக்க முடியும்.

தி.மு.க.,வின் தில்லுமுல்லுகளை, தேச விரோத, மக்கள் விரோதப் போக்குகளை இப்போதிருந்தே, மக்களிடம் தோலுரித்து காட்ட வேண்டும். இந்த வகையில், பிரசாரங்களை மேற்கொண்டால், 2021லும், தி.மு.க., ஆட்சிக்கு வர நினைப்பது கனவாகவே இருக்கும்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
10-ஜன-202015:24:13 IST Report Abuse
venkat Iyer திரு.காந்தி ராஜா குறிப்பிட்டது போல திமுக பழைய பஞ்சாங்கத்தினை கையில் எடுக்க நினைக்கவில்லை. மக்கள் மனதில் திமுக முன் நிற்க திரு பிரசாத் கிஷோர் அவர்களின் யோசனையில் புதிய மாற்றங்களை செய்ய உள்ளனர்.மக்கள் என்ன விரும்புகிறார்களோ அவற்றினை எதிர்க்க கூடாது.அதில் தமிழக மக்கள் ஆன்மீகத்தில் அனைவரும் காலுன்ற ஆரம்பித்துவிட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
10-ஜன-202009:39:52 IST Report Abuse
Siva நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற திமுக வுக்கு கை கொடுத்தது பண பட்டு வாடா தான்.... அந்த தேர்தலில் அதிமுகவினர் அசட்டையாக இருந்தனர். காரணம் அதிமுக நோக்கம் மாநில ஆட்சியை தக்க வைப்பது.... எனவே திமுக வெற்றி ஒரு கானல் நீர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X