பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : ஜன 09, 2020
Advertisement
 இதே நாளில் அன்று


ஜனவரி, 10, 1940

கே.ஜே.ஜேசுதாஸ்: கேரளாவின் கொச்சியில், அகஸ்டைன் யோசப்குக் - அலைசுகுட்டி தம்பதிக்கு, 1940ல் பிறந்தார். பொம்மை என்ற தமிழ் திரைப்படத்தில், 'நீயும் பொம்மை, நானும் பொம்மை' என்ற பாடல் வாயிலாக பின்னணி பாடகராக அறிமுகமானார்.

கர்நாடக இசைக்கலைஞரான அவர், தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களை பாடியுள்ளார். ஏழு முறை, தேசிய விருது பெற்றவர். கேரளம், தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் இருந்து, 45 முறை, சிறந்த பாடகருக்கான விருது பெற்றவர்.

திரைப் பாடல்கள் தவிர, கர்நாடக இசை கச்சேரிகள் பல நடத்தி உள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசை பாடல்கள் அடங்கிய இசை தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாள திரைப்படங்களுக்கு, இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

அவர் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X