பொது செய்தி

இந்தியா

பி.எஸ்.என்.எல்., இந்தியாவின் சொத்து! மத்திய அமைச்சர் ரவிசங்கர் பெருமிதம்

Added : ஜன 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 பி.எஸ்.என்.எல்., இந்தியாவின் சொத்து!  மத்திய அமைச்சர் ரவிசங்கர் பெருமிதம்

சென்னை: ''பி.எஸ்.என்.எல்., என்பது தொலை தொடர்பு நிறுவனம் அல்ல; அது, இந்தியாவின் மிகப்பெரிய சொத்து,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

சென்னை மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு இடையே, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சார்பில், ஆழ்கடல் வழியாக கண்ணாடி இழை வடம் பதிக்கும் பணியை, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சென்னையில், நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:ஆழ்கடலுக்கு அடியில், 'ஆப்டிகல் பைபர்' கேபிள் எனப்படும், கண்ணாடி இழை வடம் பதிப்பது என்பது, இந்தியாவில் முதல்முறையாக நடக்கிறது. இது, இந்திய வரலாற்றின் ஒரு மைல் கல். அந்தமான் நிகோபார் தீவு, இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.

ஆங்கிலேயர் காலத்தில், கருப்பு பகுதியாக, அந்தமான் நிகோபார் தீவு இருந்தது. அதிகபட்ச தண்டனையாக, துாக்கிலிடும் செயல் மட்டுமே அங்கு நடந்தது. சுதந்திர போராட்ட தியாகிகளால், அந்த இருளில் இருந்து, அந்தமான் வெளியேறியது. தற்போது அழகான சுற்றுலா தீவாக திகழ்கிறது.இங்கு, செயற்கோள் வாயிலாக பயன்படுத்தப்படும், இன்டர்நெட் வசதி மட்டுமே கிடைக்கிறது. அதனால், பொருளாதாரத்தில் அந்தமானால் வளர முடியவில்லை. எனவே, சென்னை - அந்தமான் இடையே, கண்ணாடி இழை வடம் பதிக்க திட்டமிடப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது.

இதனால், தற்போது கிடைக்கும், இன்டர்நெட் வேகத்தை விட, 100 மடங்கு அதிகமாக, நொடிக்கு, 400 ஜி.பி., வேகத்தில் இன்டர்நெட் சேவை கிடைக்கும். இதற்காக, 1,000 அடி ஆழத்தில், சுறா மீன்களால் கூட சேதப்படுத்த முடியாத வகையில், 2,250 கி.மீ., துாரத்திற்கு, 1,224 கோடி ரூபாய் செலவில், கேபிள் பதிக்கப்படுகிறது. இதுபோல, கேரளா மாநிலம், கொச்சி முதல் லட்சத் தீவு வரை, 1,000 கோடி ரூபாய் செலவில், ஆழ்கடலில் கண்ணாடி இழை வடம் பதிக்கும் திட்டத்திற்கும், ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல்., என்பது, தொலை தொடர்பு நிறுவனம் மட்டும் அல்ல; அது, இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாக திகழ்கிறது. நாட்டின் எந்தவொரு பகுதியில், இயற்கை பேரிடர் ஏற்படும் போதும், பி.எஸ்.என்.எல்., சேவை தான் முதலில் உதவிக்கரம் நீட்டும். நான், 2014ல் அமைச்சராக பொறுப்பேற்ற போது, இந்தியாவில் இரண்டு மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன.

தற்போது, 268 மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.மொபைல் போன் தயாரிப்பில், இரண்டாவது பெரிய நாடாக, உலகிலேயே இந்தியா உருவாகி உள்ளது. இதன் வாயிலாக, 6.5 லட்சம் பேர் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.இவ்வாறு, ரவிசங்கர் பிரசாத் பேசினார்.நிகழ்ச்சியில், பி.எஸ்.என்.எல்., நிர்வாக இயக்குனர் புர்வார், அந்தமான் - நிக்கோபார் தீவுகள் துணைநிலை கவர்னர் ஜோஷி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
10-ஜன-202010:14:25 IST Report Abuse
RajanRajan எத்தினி காலமாய் கட்டுமர ஊழல் பரம்பரை சொத்தா சூரிய குடும்ப சொத்தா இருந்த BSNL இப்போ தான் இந்தியாவின் சொத்துன்னு அறிவிக்க முடிந்தது அதுவும் விட்டு போன மிச்சம் மீதியை வச்சு தான். சரி பார்த்து போடுங்கப்பா அந்த OFC லைனை. ஞாபகம் வருதே ஞாபகம் வருதீனு பழைய ஞாபகத்தில்.எங்கயாச்சும் வந்து சொருகிற போவுறாங்க அந்த சூரிய குடும்பம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X