அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை சட்ட விவகாரம்: ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை விவாதத்திற்கு எடுக்காததை கண்டித்து வெளிநடப்பு

Added : ஜன 09, 2020 | கருத்துகள் (9)
Advertisement
 குடியுரிமை சட்ட விவகாரம்: ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை விவாதத்திற்கு எடுக்காததை கண்டித்து வெளிநடப்பு

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை, விவாதத்திற்கு எடுக்காததை கண்டித்து, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், நேற்று வெளிநடப்பு செய்தனர்.

தீர்மானம்

சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து, ''குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி, ஸ்டாலின் கடிதம் கொடுத்தார். ''அதன் நிலை என்ன என, நேற்று முன்தினம் கேட்டார். ஆய்வில் உள்ளதாக கூறினீர்கள். இன்று, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமா?'' என, கேட்டார்.அதற்கு சபாநாயகர், ''அந்தக் கடிதம், என் ஆய்வில் உள்ளது,'' என்றார். உடனே துரைமுருகன், ''கூட்டத்தின் கடைசி நாளான, இன்றும் ஆய்வில் உள்ளது என்றால், எப்போது ஆய்வு முடியும்?'' என, கேட்டார்.

அதற்கு சபாநாயகர், ''உரிய நேரத்தில் உரிய பதில் தரப்படும்,'' என்றார். அதைத் தொடர்ந்து, தீர்மானம் கொண்டு வராததை கண்டித்து, வெளிநடப்பு செய்வதாக, துரைமுருகன் தெரிவித்தார். இதையடுத்து, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், வெளிநடப்பு செய்தனர்.சபாநாயகர் காரணம்இது குறித்து, துரைமுருகன் கூறியதாவது:குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, கேரள அரசு கண்டன தீர்மானம் நிறைவேற்றியது போல, தமிழக சட்டசபையிலும் தீர்மானம் கொண்டு வரக்கோரி, ஸ்டாலின் கடிதம் கொடுத்தார்.

அந்த தீர்மானம், சபாநாயகர் ஆயுளுக்கும் ஆய்வில் இருக்கும் போல தெரிகிறது. இதற்கு, சபாநாயகர் காரணம் அல்ல; அரசு அந்த தீர்மானத்தை கொண்டு வர அஞ்சுகிறது. மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் போட, இந்த ஆட்சிக்கு, 'தில்' இல்லை; முதல்வருக்கும் இல்லை. கேரளாவில், ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றாக இணைந்து, கண்டன தீர்மானத்தை கொண்டு வந்தன.சட்டசபை கூட்டத்தின் இறுதி நாளில், ஆய்வில் இருக்கிறது எனக் கூறி, எங்கள் தீர்மானத்திற்கு ஆயுள் முடிந்து விட்டது என, சபாநாயகர் மறைமுகமாக கூறுகிறார். அதை கண்டித்து, வெளிநடப்பு செய்தோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopal - Jakarta,இந்தோனேசியா
10-ஜன-202014:49:52 IST Report Abuse
Gopal சரியான சோம்பேறி கும்பல் இந்த DMK
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
10-ஜன-202014:29:14 IST Report Abuse
ஆரூர் ரங் முழு பேப்பரில் எழுதிக்கொடுத்தால் சுடாலின் கொடுத்தது என நம்பியிருக்கமாவே மாட்டார்கள் துண்டு சீட்டில் மட்டும் எழுதிக்கொடுக்கவும்
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
10-ஜன-202014:17:38 IST Report Abuse
elakkumanan இவர்கள் உள்ள இருந்தாலும், வெளிய இருந்தாலும், எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை. உண்மையை சொல்லனும்னா, இவர்கள் இருந்தாதான் தொல்லையே.................இவர்கள் திருட்டு, பொய், ஏகடியம், ஏமாத்து, கூத்து, கும்மாளம் இதை தவிர எதையுமே செய்தறியாத ஜீவன்கள் ...............சொந்த குடும்பத்தை மட்டுமே கவனிக்கும் சுயநல வித்தகர்கள் ...............இதை தாண்டி, இவர்களை வேறெந்த வரைமுறைக்குள்ளும் அடைக்கமுடியாது......................இதையெல்லாம் ஒரு நியூஸ் னு போடாதீங்க சார்.....திட்டி எழுதினா , கை நிறுத்தவே மாட்டேங்குது சார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X