பொது செய்தி

தமிழ்நாடு

தியேட்டர்களில், 'தர்பார்' திருவிழா

Added : ஜன 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தியேட்டர்களில், 'தர்பார்' திருவிழா

சென்னை: ரஜினி நடித்த, 'தர்பார்' படம், நேற்று திரைக்கு வந்தது. இதை, ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

தடையை மீறி, முதல் நாளே, இந்தப் படம் இணையதளத்தில் வெளியானது.ரஜினி, நயன்தாரா நடிக்க, 'லைக்கா' நிறுவனம் தயாரித்த, 'தர்பார்' படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இப்படம், உலகம் முழுக்க நேற்று வெளியானது. படத்திற்கு, ரஜினி ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்தனர். தியேட்டர் வாயிலில், பட்டாசு மழை பொழிந்தது. சென்னையில், கோயம்பேடு, ரோகிணி தியேட்டரில், அதிகாலை, 3:00 மணி காட்சியின் போது, ரசிகர்கள் அனைவருக்கும், 'சாக்லேட்' வழங்கப்பட்டது.

மேலும், பறக்கும் பலுான் மூலமாக, சாக்லேட் மழையையும் பொழிய வைத்தனர். ரஜினி மனைவி லதா, மகள்கள், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர், ரசிகர்களுடன் அமர்ந்து, படத்தை பார்த்தனர். மேலும், இயக்குனர் ஷங்கர், லிங்குசாமி, கவுதம் மேனன், நடிகர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரும், ரசிகர்களுடன் படம் பார்த்தனர். மதுரையில், ரஜினி ரசிகர்கள், மண்சோறு சாப்பிட்டும், அலகு குத்தியும், படத்தின் வெற்றிக்காக வேண்டினர். இதற்கிடையில், படத்தை இணையதளத்தில் வெளியிட, நீதிமன்ற தடை உத்தரவை, தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால், தியேட்டரில் வெளியான நேற்றே, இணையதளத்திலும் படம் வெளியாகி, படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நீதிமன்றம் தடைதர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், லைக்கா நிறுவனம் மனு தாக்கல் செய்தது. ௧,௩௭௦ இணையதளங்களின் பட்டியலையும் தாக்கல் செய்தது.மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. லைக்கா நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, ''சட்டவிரோதமாக, இணையதளத்தில் படத்தை வெளியிட்டால், எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே, இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, இப்படத்தை இணையதளங்களில் வெளியிட, நீதிபதி தடை விதித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - புதுகை,இந்தியா
10-ஜன-202007:04:42 IST Report Abuse
மணி அவனவன் அவனவன் வேலைய பாத்துட்டு போய்கிட்டு இருக்கான் சார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X