வடகிழக்கு பருவ மழை முடிந்ததாக அறிவிப்பு: 5 மாவட்டங்களில் பற்றாக்குறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடகிழக்கு பருவ மழை முடிந்ததாக அறிவிப்பு: 5 மாவட்டங்களில் பற்றாக்குறை

Added : ஜன 09, 2020
Share
சென்னை: வடகிழக்கு பருவமழை நிறைவுக்கு வந்ததாக, சென்னை வானிலை ஆய்வு மையம், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் கூறியதாவது:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு, மாநிலம் முழுவதும், வறண்ட வானிலையே நிலவும். இரவில் பனிப்பொழிவு காணப்படும். தமிழகம்,

சென்னை: வடகிழக்கு பருவமழை நிறைவுக்கு வந்ததாக, சென்னை வானிலை ஆய்வு மையம், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் கூறியதாவது:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு, மாநிலம் முழுவதும், வறண்ட வானிலையே நிலவும். இரவில் பனிப்பொழிவு காணப்படும். தமிழகம், புதுச்சேரியில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பு அளவான, 44 செ.மீ.,யில் இருந்து, 2 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், 64 சதவீதம்; திருநெல்வேலி, ராமநாதபுரம், 45; துாத்துக்குடி, 31; கோவை, 29; புதுக்கோட்டையில், 27 சதவீதம் இயல்பு அளவிலிருந்து கூடுதலாக பெய்துள்ளது.மதுரை, பெரம்பலுார், திருவண்ணாமலை, வேலுார் மற்றும் புதுச்சேரியில், 24 சதவீதம், மழை குறைவாக பெய்துள்ளது. சென்னைக்கு, 76 செ.மீ., மழை பெய்ய வேண்டும்; 64 செ.மீ., மழை பெய்துள்ளது. அதற்கு பதில், ஜனவரியில் அதிக மழை பெய்துள்ளதால், சென்னையில், மழை பற்றாக்குறை, 10 சதவீதமே. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X