அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓ.பி.எஸ்., மற்றும் ஸ்டாலினுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் கமாண்டோ பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது

Added : ஜன 09, 2020 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு வழங்கப்பட்ட, மத்திய ரிசர்வ் போலீஸ் கமாண்டோ பாதுகாப்பு, இன்று முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, 'ஒய் பிளஸ்' பாதுகாப்பும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பும் வழங்கப் பட்டன. துணை முதல்வர் வெளியில் செல்லும் போது, மூன்று கமாண்டோக்கள் உடன் செல்வர். வீட்டில் மூன்று பேர் பாதுகாப்பு பணியில் இருப்பர். வெளியூர் செல்லும் போது, கூடுதல் கமாண்டோக்கள், பாதுகாப்பிற்கு உடன் செல்வர். அதேபோல், ஸ்டாலினுக்கும், மத்திய ரிசர்வ் போலீஸ் கமாண்டோ வீரர்கள், பாதுகாப்பு வழங்கி வந்தனர்.

தற்போது, நாடு முழுவதும், வி.ஐ.பி., களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை, மத்திய அரசு விலக்கி வருகிறது. அந்த வகையில், பன்னீர்செல்வம், ஸ்டாலின் ஆகியோருக்கு வழங்கப்பட்ட, மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பை விலக்கிக் கொள்ள, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.எனவே, இன்று முதல், அவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதற்கு பதிலாக, தமிழக போலீசார் சார்பில், கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
10-ஜன-202013:34:33 IST Report Abuse
s.rajagopalan இந்த பாதுகாப்பு ஒரு 'அந்தஸ்து' என்றாகிவிட்டது. 'பழி வாங்கல்' என்ற குற்றச்சாட்டிற்கு வசதி. ஸ்தாலினுக்கு இங்கு எதிரி என்று யாராவது இருக்கிறார்களா ? சட்ட சபையில் சட்டை கிழிந்தால்தான் உண்டு சட்ட சபை என்றால் சட்டை கிழியத்தான் செய்யும் பன்னீருக்கும் பாதுகாப்பு கிடையாது என்பதால் கூச்சல் குறையும்.
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
10-ஜன-202005:38:39 IST Report Abuse
Matt P கொலை கொள்ளைக்கார்களுக்கு கூட பாதுகாப்பு கொடுப்பார்கள். . நாட்டில் நல்லவர்களுக்கு தான் பாதுகாப்பு இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X