கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நாளை மறைமுக தேர்தல்: 'வீடியோ' பதிவு செய்ய முடிவு

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (2)
Advertisement
LocalBodyElection,video,election,தேர்தல்,வீடியோ

சென்னை: 'மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர் தேர்தலின்போது, வீடியோ பதிவு செய்யப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், 27 மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட, ௫௧௫ வார்டுகளிலும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 5,090 வார்டுகள் மற்றும் கிராம பஞ்சாயத்து வார்டுகளிலும், இரண்டு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. ஓட்டு எண்ணிக்கையும் முடிந்து, வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். அடுத்த கட்டமாக, மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல், நாளை நடக்கிறது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., சட்டத்துறை செயலர் ஆர்.கிரிராஜன் தாக்கல் செய்த மனு: மறைமுக தேர்தல் தொடர்பாக, தேர்தல் அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்துள்ளோம். தேர்தலை, குரல் ஒலிப்பதிவுடன், வீடியோ பதிவு செய்யவும், அதை சேதப்படுத்தாமல் பத்திரப்படுத்தி வைக்கவும் கோரியுள்ளோம். மறைமுக தேர்தல் மற்றும் ஓட்டு எண்ணிக்கையை, சுதந்திரமாக, நியாயமான முறையில் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணையம் சார்பில், வழக்கறிஞர் நெடுஞ்செழியன் ஆஜராகி, ''ஒரு கட்சியின் சட்டத்துறை செயலர், இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ''இதை, பொதுநல வழக்காக கருத முடியாது. மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலில், வீடியோ மட்டும் பதிவு செய்யப்படும்,'' என்றார்.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் நீலகண்டன், ''ஏற்கனவே, ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கின் தொடர்ச்சி தான் இது. 27 மாவட்டங்களுக்கும் சேர்த்து தான், இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வீடியோ பதிவு மட்டும் அல்லாமல், ஆடியோ பதிவையும் மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். இதையடுத்து, 'இந்த வழக்கை பொதுநல வழக்காக கருத முடியாது' எனக் கூறிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நீதிபதி முன், விசாரணைக்கு பட்டியலிடும்படி, பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனர்.

இதேபோல, வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் சிலர் சார்பில், மறைமுக தேர்தலை நியாயமாக நடத்த உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்தது. மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், 'ஜன., 11ல் நடக்கும் மறைமுக தேர்தல் நடவடிக்கைளை, வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது. இதை, பதிவு செய்த நீதிபதிகள், 'இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. உத்தரவாதம் நிறைவேற்றப்பட்டது குறித்து, மாநில தேர்தல் ஆணையம், ஜன., 21ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
10-ஜன-202009:10:08 IST Report Abuse
GMM திமுக சட்டத்துறை செயலாளர். துறை என்ற பெயரில் அரசியல் கட்சி பெயர் வைத்து கொள்வது சரியாக இருக்குமா? வீடியோ பதிவு/35mm, 70mm பிலிம் பதிவு எதுவாக இருந்தாலும் செலவை (திமுக) மனுதாரர் ஏற்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
10-ஜன-202006:25:24 IST Report Abuse
blocked user EVM ஐ உபயோகித்து இருந்தால் இந்த பிரச்சினை வந்து இருக்காது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X