கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பலாத்காரம்: தொழிலாளிக்கு 20, 'ஆண்டு'

Added : ஜன 09, 2020
Advertisement

ஈரோடு: சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம், எலத்துார் புது அரிஜன காலனியை சேர்ந்தவர், ரமேஷ்குமார், 29; கூலி தொழிலாளி. இவருக்கு, இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.எலத்துாரை சேர்ந்த, 15 வயது சிறுமியை, 2016 அக்.,14ல் பாலியல் பலாத்காரம் செய்தார். கொலை மிரட்டல் விடுத்ததால், நடந்த சம்பவத்தை, சிறுமி யாரிடமும் கூறவில்லை. இதற்கிடையில் சிறுமிக்கு, 2017 அக்., 7ல் பெண் குழந்தை பிறந்தது.இதையடுத்து, கோபி அனைத்து மகளிர் போலீசார், ரமேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின், அவர் ஜாமினில் வெளியே வந்தார்.இந்த வழக்கு, ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று, நீதிபதி மாலதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ரமேஷ்குமாருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை, சிறுமிக்கு நீதிமன்றம் வாயிலாக, 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு, 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என, பரிந்துரைத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X