சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கவுன்சிலர் கடத்தப்பட்டதாக வழக்கு மகனுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

Added : ஜன 09, 2020
Advertisement

மதுரை: முதுகுளத்துார் ஒன்றிய, தி.மு.க., கவுன்சிலர் கடத்தப்பட்டதாக தவறான தகவல் அளித்து, மனு தாக்கல் செய்த மகனுக்கு, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் வதியனேந்தலைச் சேர்ந்தவர், சாத்தையா. முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றியம், எட்டாவது வார்டில், தி.மு.க., சார்பில் கவுன்சிலராக ஜெயித்தார்.ஜனவரி, 3ல், நண்பர்களை சந்திக்க சென்றவர் வீடு திரும்பவில்லை என்றும், ஒன்றிய தலைவர் தேர்தலுக்காக, சிலர் கடத்தி வைத்துள்ளதாகவும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், அவரது மகன் ராஜா, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். சாத்தையாவை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்று நீதிபதிகள், டி.ராஜா, பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்ட சாத்தையா, ''என்னை யாரும் கடத்தவில்லை. என் வசதிக்காக, மகள் மற்றும் மருமகன் வீட்டில் இருந்தேன்,'' என்றார்.நீதிபதிகள் உத்தரவு:மனுதாரர், நீதிமன்றத்திற்கு தவறான தகவல் அளித்துள்ளார்; நீதிமன்ற நேரத்தை வீணடித்துள்ளார். மனுதாரருக்கு, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம். தொகையை, உயர் நீதிமன்ற கிளை வளாக சட்டப் பணிகள் ஆணைக் குழுவிற்கு செலுத்த வேண்டும்.இவ்வாறு, உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X