லோயா மரண வழக்கு துாசி தட்டுது மஹா., அரசு

Added : ஜன 09, 2020
Advertisement

மும்பை: ''சி.பி.ஐ., நீதிபதி பி.எச்.லோயா மரண வழக்கை, மீண்டும் விசாரிக்க, மஹாராஷ்டிரா அரசு தயார்,'' என, மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.மும்பை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் பி.எச்.லோயா. குஜராத்தில் நடந்த, சொராபுதீன், 'என்கவுன்டர்' வழக்கை விசாரித்து வந்தார். கடந்த, 2014, டிசம்பர், 1ம் தேதி, தன் நண்பருடைய மகளின் திருமணத்தில் பங்கேற்க, நாக்பூருக்கு சென்றிருந்தார். அங்கு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் உள்ளது என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், 'அவர் மாரடைப்பால் மரணமடைந்தார்' என, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் அடங்கியது.

இந்நிலையில், மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மும்பையில் நேற்று கூறியதாவது:நேற்று என்னை சிலர் சந்தித்து, 'நீதிபதி லோயாவின் மரணத்தில் உள்ள சந்தேகம் இன்னும் நீங்கவில்லை; அதனால், அவரது மரணம் பற்றி விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.

தேவைப்பட்டால், நீதிபதி லோயாவின் மரணம் பற்றி விசாரிக்க, மாநில அரசு தயாராக உள்ளது. தலைமறைவு தாதா லக்டாவாலாவை, பீஹார் மாநிலம், பாட்னாவில் கைது செய்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். அவர்களுக்கு, சன்மானம் வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X