பொது செய்தி

இந்தியா

சியாச்சின் பனி சிகரத்தில்

Added : ஜன 09, 2020
Advertisement
 சியாச்சின் பனி சிகரத்தில்

புதுடில்லி: உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படும், சியாச்சின் பனி சிகரத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கும் பொருட்டு, இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, அவர்களை நேற்று நேரில் சந்தித்து உற்சாகமூட்டினார்.

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக, மனோஜ் முகுந்த் நரவானே, கடந்த மாதம், 31ல் பதவி ஏற்றார்.இவர் பதவி ஏற்றபின், முதல் முறையாக, இமய மலையின் கிழக்கு கரகோரம் பகுதியில் அமைந்துள்ள சியாச்சின் பனி சிகரத்திற்கு நேற்று சென்றார்.பாதுகாப்பு பணிஇது, உலகின் மிக உயரமான போர்க்களமாககருதப்படுகிறது. இங்கு, ஆண்டு முழுவதும், 'மைனஸ் டிகிரி'யில், கடும் குளிர் வாட்டி வதைக்கும். இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, அவ்வளவு எளிதான காரியமல்ல.இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நம் வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கும் பொருட்டு, நம் ராணுவ தளபதி நரவானே, நேற்று சியாச்சின் சிகரத்திற்கு சென்றார்.அங்கு, பாதுகாப்பு பணியின் போது, வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவு சின்னத்தில், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின், வீரர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பதவி ஏற்ற உடனேயே, சியாச்சின் வரவேண்டும் என விரும்பினேன். ஆனால், ஜனவரி முதல் வாரத்தில், கடும் பனிப்பொழிவு இருந்ததால், வர இயலவில்லை. சீதோஷ்ண நிலைநாட்டை பாதுகாப்பதற்காக, கடுமையான சீதோஷ்ண நிலையையும் பொருட்படுத்தாமல், வீரர்கள் பணியில் ஈடுபட்டு இருப்பதை, அனைவரும் அறிவோம்.இங்கு, வீரர்களுக்கு தேவையான உடை, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தருவதில், ராணுவம் உறுதியுடன் உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X