சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமரி, 'செக்போஸ்ட்'டில் எஸ்.ஐ.,யை கொன்றது பயங்கரவாதிகள்? புகைப்படம் வெளியீடு

Updated : ஜன 10, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (55+ 98)
Advertisement
SI,shoot,dead,Checkpost,terrorist,SSI,பயங்கரவாதிகள்,குமரி, செக்போஸ்ட்,எஸ்ஐ

நாகர்கோவில்: குமரி மாவட்டம் களியக்காவிளை 'செக்போஸ்ட்'டில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இருவரது புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக இரு மாநில டி.ஜி.பி.க்கள் திருவனந்தபுரத்தில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையின் பின்பகுதி வழியாக கேரளா செல்லும் அணுகு சாலையில் கடத்தலை தடுக்க போலீஸ் செக்போஸ்ட் உள்ளது. மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் 57 நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த இருவர் வில்சனிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென ஒருவர் துப்பாக்கியால் வில்சன் மீது மூன்று ரவுண்டு சுட்டுள்ளார். இதில் கழுத்து, கால், மார்பில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் வில்சன் விழுந்தார்.

இரண்டு நபர்களும் அருகில் உள்ள பள்ளிவாசல் வழியாக தப்பி காரில் ஏறி கேரளாவை நோக்கிச் சென்றுள்ளனர். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் வில்சனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்; வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.


படம் வெளியீடு:

சம்பவ இடத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே, எஸ்.பி. ஸ்ரீநாத் வந்து விசாரணை நடத்தினர். சோதனை சாவடி அருகில் உள்ள கேமராவில் இருவர் தப்பி ஓடுவது தெளிவாக பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் குமரி மாவட்டம் இடலாக்குடி கிராமத்தைச் சேர்ந்த தவுபிக் 27, திருவிதாங்கோடு அப்துல் சமீம் 29 ஆகியோரை தேடப்படும் நபர்களாக போலீசார் அறிவித்துள்ளனர். இவர்களது படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

சில மாதங்களாகவே இடலாக்குடி திருவிதாங்கோடு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி சில வீடுகளில் இருந்து கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை பறிமுதல் செய்திருந்தனர். தவுபிக், அப்துல் சமீம் வீடுகளிலும் கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.

திருவள்ளூர் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்து தலைமறைவாக இருந்த மூன்று பேரை சமீபத்தில் பெங்களூரில் தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். அதற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. என்.ஐ.ஏ. அதிகாரிகளும் குமரி வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


அதிகாரிகள் ஆலோசனை:

நேற்று டி.ஜி.பி. திரிபாதி, தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், திருவனந்தபுரம் டி.ஐ.ஜி. அசோக், நெல்லை டி.ஐ.ஜி. பிரவீன்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். பின் நிருபர்களிடம் பேசிய திரிபாதி ''குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரமாக நடக்கிறது'' என்றார்.

முன்னதாக கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ராவுடன் திருவனந்தபுரம் சங்குமுகம் விருந்தினர் விடுதியில் திரிபாதி ஆலோசனை நடத்தினார். குற்றவாளிகளை பிடிக்க இரு மாநில போலீசும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. குற்றவாளிகளின் படங்களை கேரள போலீசாருக்கும் அனுப்பியுள்ளனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட வில்சன் உடல் 21 குண்டுகள் முழங்க மார்த்தாண்டத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


பரிதாபம்:

சமீபத்தில் தான் சிறப்பு எஸ்.ஐ.யாக வில்சன் பதவி உயர்வு பெற்றார். துாத்துக்குடியில் நான்கு மாதங்கள் பணியாற்றி மீண்டும் குமரி மாவட்டம் வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய இவர் சிகிச்சைக்கு பின் ஜன. 1ல் தான் மீண்டும் பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்த ஒரு வாரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (55+ 98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-202010:55:15 IST Report Abuse
Yaro Oruvan என்ன ஒரு பாக்கியயும் இந்த பக்கத்துல காணோம்.. லீவு எடுத்துட்டானுவளோ?
Rate this:
Share this comment
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
11-ஜன-202001:25:36 IST Report Abuse
ராஜேஷ் அரசின் மெத்தன போக்கும் , சில போலீஸ் அதிகாரிகளின் அராஜமும்தான் காரணம். ஆம்பூரில் பெண்காவலர்களை சட்டையை பிடித்து கிழிக்கும்போதே அவன் கையை ஓடித்திருந்தால் இன்று துப்பாக்கியை எடுத்துருப்பான ? திருநங்கையுடன் பிரச்சினை செய்யும் பொது அமைதியை ஏறுபடுத்திய போலீசை அடித்து சட்டையை கிழித்தபோது ரௌடியைகளை பாத்ரூமில் வலுக்கிவிட வைக்காமல் . அடிவாங்கிய போலீஸ்காரரை வேறு இடத்துக்கு ட்ரான்ஸபிர் செய்த அதிகாரியை காறித்துப்புங்கள் . இன்னும் எதனை வில்சனும் ,கோவை செல்வராஜும் சாகப்போகிறார்களோ
Rate this:
Share this comment
Cancel
10-ஜன-202023:01:39 IST Report Abuse
பகுத்தறிவு சுடலை மற்றும் கமால்கான் எங்கிருந்தாலும் மேடைக்கு வருக. நம்ம திராவிஷ கம்மி களின் வாதம். செத்தவர் நிம்மதியாக போய்விட்டார். ஆனால் சுட்டவர்கள் இந்த சத்தத்தில் பயந்து ஓடி களைத்துவிட்டனர். சிறுபான்மையினரை இப்படி ஓடி ஒளிந்து வாழும்படி செய்வதில் கொஞ்சமும் நியாயம் இல்லை. ஒரு நாள் தலைமறைவாக இருந்து பாருங்கள் இப்பொழுது தெரியும் அந்த இருவரின் சிரமங்களும். அவ்விருவரும் அரசு செலவில் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். வேட்டையாடப்பட வேண்டியவர்கள் அல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X