சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலிடெக்னிக் பஸ்சில் தீ

Added : ஜன 09, 2020
Advertisement
 பாலிடெக்னிக் பஸ்சில் தீ

அவிநாசி: அவிநாசி அருகே, மாணவர்களை அழைத்துச் செல்ல வந்த, பாலிடெக்னிக் கல்லுாரி பஸ், திடீரென தீப்பற்றி எரிந்தது.

கோவை வெள்ளமடையில், திருவள்ளுவர் பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரி பஸ், மாணவர்களுக்காக, திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதிக்கு சென்று வருகிறது. நேற்று காலை, 11:30 மணியளவில் அந்த பஸ், அவிநாசி நோக்கி சென்றது. பஸ்சை, டிரைவர் நாராயணசாமி, 48, ஓட்டினார்.மொண்டிபாளையம் பிரிவு அருகே வந்தபோது, இன்ஜின் பகுதியில் தீப்பற்றி, பஸ் முழுவதும் பரவியது. உடனடியாக, ஓட்டுனர் பஸ்சில் இருந்து வெளியேறினார்.அவ்வழியாக சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அவிநாசி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தீயைக் கட்டுப்படுத்தினர். அதற்குள், பஸ்சின் பெரும்பகுதி, நாசமானது.தீப்பிடித்த பஸ்சில், அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் இல்லை; அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X