சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செங்குளவி கொட்டி ஒருவர் பலி

Added : ஜன 09, 2020
Advertisement

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மாலகோவில் பிரிவு உள்ளது. அங்குள்ள விளை நிலங்களில் நேற்று, 20க்கும் மேற்பட்டோர், விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காலை, 11:30 மணிக்கு, திடீரென பறந்து வந்த செங்குளவி கூட்டம், வேலை செய்து கொண்டிருந்தவர்களை கொட்டத் துவங்கியது. இதில், சூலுார், பச்சாக்கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த மல்லீஸ்வரன், 55, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அங்கு டீக்கடை வைத்துள்ள ரவிச்சந்திரன், 51, கூலி தொழிலாளி சுப்பிரமணியம், 35, நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் ராஜேந்திரன், 50 ஆகியோரும், செங்குளவிகள் கொட்டியதில், மயக்கம் அடைந்தனர்.அவர்களை, அப்பகுதி மக்கள் மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான பாதிப்பு ஏற்பட்ட, 18 பேருக்கு, பெதப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X