கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கவுன்சிலரை கடத்தியதாக வழக்கு கேரளாவில் உள்ளதாக தகவல்

Added : ஜன 09, 2020
Advertisement

மதுரை: சிவகங்கை மாவட்ட கவுன்சிலராக வெற்றி பெற்ற பெண் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அவர் கேரளாவுக்கு சுற்றுலாவுக்கு சென்றிருப்பதாக, அரசு தரப்பு தெரிவித்தது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே, செங்குளம் அன்பரசன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு:என் தாய் ஆரோக்கிய சாந்தராணி. இவர், சிவகங்கை மாவட்ட ஊராட்சி, 15வது வார்டு கவுன்சிலாக வெற்றி பெற்றார். ஜனவரி, 6ல் பதவியேற்ற பின், வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தனக்கு வேண்டிய ஒருவரை, மாவட்ட ஊராட்சித் தலைவராக்க, என் தாயை காங்., முன்னாள் நிர்வாகி ஒருவர் சட்டவிரோதமாக கடத்தி வைத்துள்ளார்.தற்போது, என் தாயை கேரளாவில் தடுத்து வைத்துள்ளதாக தெரிகிறது. அவரை மீட்கக் கோரி, மதுரை, ஐ.ஜி.,யிடம் புகார் செய்தோம். தாயை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.நீதிபதிகள், டி.ராஜா, பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பில், 'கேரளா, இடுக்கி அருகே வாகமனில் ஆரோக்கிய சாந்தராணி உள்ளார். மனுதாரரின் உறவினர் ஒருவர், வாகமன் போலீசில் புகார் செய்தார். அங்கு நடந்த விசாரணையில், கணவருடன் சுற்றுலா வந்ததாக ஆரோக்கிய சாந்தராணி தெரிவித்துள்ளார்.'அவரிடம் விசாரிக்க, தமிழக சிறப்புப்படை போலீசார் சென்றுள்ளனர். அவர்கள் அழைத்து வரும் பட்சத்தில், இன்று ஆரோக்கிய சாந்தராணியை ஆஜர்படுத்த வாய்ப்புள்ளது' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள் இன்று ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X