சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை கடையில் திருட்டு 97 சவரன் மீட்பு

Added : ஜன 09, 2020
Share
Advertisement
 நகை கடையில் திருட்டு 97 சவரன் மீட்பு

கடலுார்: நகைக்கடையில் திருடிய ஊழியரிடம் இருந்த, 97 சவரன் நகைகளை, போலீசார் மீட்டனர்.க
டலுார், முதுநகர், சான்றோர்பாளையம் அடுத்த காந்தி நகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வன், 29. இவர் கடலுார், சுப்ராய செட்டித்தெருவில் உள்ள நகைக்கடையில், பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.சமீபத்தில், கடை உரிமையாளர் ஆய்வு செய்தபோது, 1 கிலோ வரை நகைகள் குறைவாக இருந்தது, தெரிய வந்தது.வழக்கு பதிவு செய்த, திருப்பாதிரிப்புலியூர் போலீசார், கலைச்செல்வனை நேற்று கைது செய்தனர்.இதுகுறித்து, டி.எஸ்.பி., சாந்தி கூறுகையில், ''கலைச்செல்வன், இரண்டு ஆண்டுகளாக, நகைகளை திருடி வந்துள்ளார். அதில் கிடைக்கும் பணத்தில், நண்பர்களோடு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். ''நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட, 97 சவரன் நகையை மீட்டுள்ளோம். தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X