இக்கட்டான சூழலில் உள்ளது நாடு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 10, 2020 | கருத்துகள் (21+ 35)
Advertisement
SupremeCourt,ChiefJustice,Bobde,SC,SABobde,சுப்ரீம்கோர்ட்,
தலைமைநீதிபதி, வேதனை, பாப்டே

புதுடில்லி: ''இந்தியா, தற்போது இக்கட்டான சூழலில் பயணித்துக் கொண்டிருக்கிறது,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்து உள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில், வினீத் தண்டா என்ற வழக்கறிஞர், 'அரசியல் சாசனப்படி, குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்து, அதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், 'குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி தவறான தகவல்கள், வதந்திகளை பரப்பும், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனு, நேற்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி, வினீத் தண்டாவிடம் கூறியதாவது: பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், எப்படி அரசியல் சாசன சட்டமாகும்? அது, அரசியல் சாசனப்படி உருவாக்கப்பட்ட சட்டமாக இருக்கும் என்பது அனுமானம் தான். நீங்கள் சட்டப் புத்தகம் படித்திருந்தால், அது பற்றி தெரிந்திருக்கும். ஒரு சட்டத்தின் தகுதியை தீர்மானிப்பது மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் வேலை; மற்றபடி, பார்லி.,யில் இயற்றப்பட்ட சட்டத்தை, அரசியல் சாசன சட்டமாக அங்கீகரிக்கும் பணியெல்லாம், இந்த நீதிமன்றத்திற்கு கிடையாது. அதற்கு, இந்த மனுக்கள் உதவாது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, ஏராளமான வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. நாடு இப்போது, இக்கட்டான சூழலில் பயணிக்கிறது. இப்போதைய தேவை அமைதி ஒன்று தான். வன்முறை சம்பவங்கள் ஓய்ந்தால் தான், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் தாக்கல் செய்துள்ள மனுக்களை பரிசீலிக்க முடியும். ஆகவே, இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த, 59 மனுக்கள், வரும், 22ல், விசாரணைக்கு வர உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (21+ 35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
16-ஜன-202019:09:02 IST Report Abuse
Sampath Kumar இதை தான் நாதால சொன்னாரு ?
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
16-ஜன-202005:47:55 IST Report Abuse
Subramanian Arunachalam தலைமை நீதிபதி என்ன சொல்லுகிறார் குடியுரிமை சட்டம் செல்லுமா செல்லாதா . மோடி அரசுக்கு அந்த சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதா அல்லது இல்லையா . மோடி அரசுக்கு அம்மாதிரி சட்டம் கொண்டு வர அரசியல் சாசனத்தின் கீழ் அதிகாரம் உள்ளதா இல்லையா . இது பற்றி தீர்ப்பு சொல்வதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும்
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
10-ஜன-202019:53:24 IST Report Abuse
GMM குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வன்முறை புரிதல் இல்லாமல் தான். மற்ற துறை தலைமை தன் கீழ் உள்ள அதிகாரிகளின் பணியை ஆய்வு செய்யும். உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற வழக்குகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தன் எல்லைக்கு உட்பட்ட அரசு நிர்வாக அலுவலர்களுக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நீதிபதி தேர்வுமுறை PSC மூலம் இருக்க வேண்டும். வக்கீல்கள் அரசு பணி காண்ட்ராக்டர் போல தான். நீதிபதி, அரசு உயர் அதிகாரி கண்டு அஞ்ச வேண்டும். வக்கீல் மனு, வாய்தா மீது அரசு தணிக்கை வேண்டும். சேவை கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். வக்கீல் வழக்கில் குறை புரியலாம். புகார் மனு கொடுக்க, விசாரிக்க அரசு அமைப்பு வேண்டும். குடியுரிமை சட்டம் இந்திய குடிமக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். சரியற்ற காரணம் ஆதிக்கம் செலுத்தும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X