பொது செய்தி

தமிழ்நாடு

துணை வேளாண் விரிவாக்க மையத்திற்கு தேவை சொந்த கட்டடம்

Added : ஜன 10, 2020
Share
Advertisement

கம்மாபுரம்:காவனூர் துணை வேளாண் விரிவாக்க மையத்திற்கு, சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கம்மாபுரம் அடுத்த காவனுாரில் கடந்த 1990 முதல், துணை வேளாண் விரிவாக்க மையம் இயங்கி வருகிறது. இதன் மூலம் கார்மாங்குடி, ஏ.வல்லியம், மேலப்பாலையூர், சி.கீரனூர், மருங்கூர், க.தொழூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் வேளாண் இடுபொருட்கள், உழவு கருவிகள் பெற்று பயனடைந்துவருகின்றனர்.
இந்நிலையில், 20 ஆண்டுகளாக வேளாண் விரிவாக்க மையம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கூடுதல் வசதி இல்லாமல் வேளாண் துறை அலுவலர்கள், விவசாயிகள் சிரமமடைந்து வருகின்றனர்.எனவே, காவனூரில் வேளாண் விரிவாக்க மையத்திற்கு புதிதாக கட்டடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X