பொது செய்தி

தமிழ்நாடு

அபாகஸ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தேர்வு

Added : ஜன 10, 2020
Advertisement
 அபாகஸ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தேர்வு

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணத்தில் அபாகஸ் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மண்டல அளவிலான போட்டித் தேர்வு த.வீ.செ., மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
துவக்க நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாக இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பழமுதிர்சோலை வரவேற்றார். பொறுப்பாசிரியர் சிவமணி முன்னிலை வகித்தார்.அபாகஸ் பயிற்சியாளர்கள் ஜாகீர்உசேன், சாலமன் ராஜ்குமார், வேல்முருகன் ஆகியோர் தேர்வுகளை நடத்தினர்.
இதில் ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ., மேல்நிலை மற்றும் நர்சரி பள்ளி, தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா, பெண்ணாடம் அம்பிகா வித்யாலயா, சேத்தியாதோப்பு மனோ வித்யாலயா, மங்கலம் பேட்டை செயின்ட் பால் மெட்ரிக் பள்ளி, வீராரெட்டிக்குப்பம் செயின்ட் ஆக்னஸ் பள்ளி, விருத்தாசலம் கிங்ஸ் அகாடமி, ஓலையூர் ஓம் சக்தி நர்சரி பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 25ம் தேதி விருத்தாசலத்தில் நடக்கிறது. ஆசிரியர்கள் தினகரன், சிவக்குமார், செல்வராஜ் தனவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X