பொது செய்தி

தமிழ்நாடு

எள் சாகுபடியில் அதிக மகசூல் பிரதமரிடம் விருது பெற்ற பெண்

Added : ஜன 10, 2020
Advertisement
எள் சாகுபடியில் அதிக மகசூல் பிரதமரிடம் விருது பெற்ற பெண்

நாமக்கல்: எள் சாகுபடியில் அதிக மகசூல் ஈட்டிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பாப்பாத்தி 61 பிரதமரிடம் விருது பெற்றார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியம் சீராப்பள்ளி ஊராட்சி குஞ்சாம்பாளையத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி. ஜெயா ரமேஷ் என இரு பிள்ளைகள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் பொன்னுசாமி உயிரிழந்தார்.

இதையடுத்து கணவர் மேற்கொண்ட விவசாயத்தை பாப்பாத்தி தொடர்ந்தார். 2017 - 18ல் 1 ஹெக்டேர் நிலத்தில் இயற்கை முறையில் எள் சாகுபடி செய்தார். வேளாண் துறை ஆலோசனைப்படி எண்ணெய் வித்து பயிரான எள் சாகுபடி மேற்கொண்டதில் 1210 கிலோ அறுவடை செய்தார். அதிகளவில் மகசூல் எடுத்த விபரம் அறிந்த சக விவசாயிகள் ஆச்சரியப்பட்டனர்.

இது தொடர்பாக வேளாண் துறையினர் தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். தமிழக அரசு மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரை செய்தது. அதையடுத்து கர்நாடக மாநிலம் தும்கூரில் 2ம் தேதி நடந்த விழாவில் விவசாயி பாப்பாத்திக்கு 'கிரிஷி கர்மான்' என்ற முன்னோடி விவசாயி விருது மற்றும் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை ஆகிவற்றை பிரதமர் மோடி வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X