சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை

Added : ஜன 10, 2020
Advertisement

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெறுகின்றனர். மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக பல முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

மருத்துவமனையில் தனியார் ஏஜென்சி மூலம் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதில் முறைகேடு மருத்துவமனைக்கு உபகரணங்களை வாங்கியதில் முறைகேடு, ஊழியர்கள் நியமனத்திற்கு லஞ்சம் பெறப்பட்டது என ஜிப்மர் ஊழியர் சங்கங்கள் மத்திய உள்துறை மற்றும் சி.பி.ஐ.க்கு புகார் அனுப்பின.

இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குழு நிர்வாக பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தி ஆவணங்களை அள்ளிச் சென்றது.இந்நிலையில் நேற்று மாலை 6 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் ஜிப்மர் நிர்வாக பிரிவு வளாகத்திற்கு வந்தனர். நிர்வாக பிரிவு அலுவலகத்தை பூட்டி கொண்டு உள்ளே இருந்த ஊழியர்களை வெளியே செல்லவும் வெளியில் இருந்து யாரையும் உள்ளே அனுமதிக்காமல் விசாரணை நடத்தினர்.

தினக்கூலி ஊழியர் களுக்கு சம்பள பில் வழங்கியது, உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தினர். பின்பு ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வாலிடம் விசாரணை நடத்த சென்றனர்.அவர் டில்லி சென்றிருந்தால் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றனர். விசாரணைக்காக நிர்வாக பிரிவில் சில ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் அள்ளிச் சென்றனர்.
ஜிப்மரில் சி.பி.ஐ. அதிகாரிகள் 2வது முறையாக நேற்று விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X