பொது செய்தி

இந்தியா

பலாத்கார வழக்குகளில் தண்டனை விதிப்பு 27.7% தான்

Updated : ஜன 10, 2020 | Added : ஜன 10, 2020 | கருத்துகள் (7)
Advertisement
rape,GangRape,judgement,rape_case,பலாத்காரம்,வழக்கு,தண்டனை

புதுடில்லி: நிர்பயா வழக்கில், நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு, பாலியல் பலாத்கார வழக்குகளில், 27.7 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

என்.சி.ஆர்.பி., எனப்படும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த, 2018ம் ஆண்டில் மட்டும், 1 லட்சத்து, 56 ஆயிரத்து, 327 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 17 ஆயிரத்து, 313 வழக்குகளில் விசாரணை முடிந்து, 4,708 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து, 133 வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். 1,472 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.





கடந்த, 2017ல், 32.2 சதவீத பாலியல் பலாத்கார வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு உள்ளன. 2017ல், 18 ஆயிரத்து, 99 வழக்குகளில் விசாரணை முடிந்து, 5,822 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
10-ஜன-202016:18:04 IST Report Abuse
Endrum Indian 27.7% தண்டனை என்பது. 2018ம் ஆண்டில் மட்டும், 1 லட்சத்து, 56 ஆயிரத்து, 327 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 17 ஆயிரத்து, 313 வழக்குகளில் விசாரணை முடிந்து, 4,708 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 1,56,327 பதியப்பட்டது இன்னும் பதியப்படாமல் எவ்வளவோ. அவ்வளவு வழக்குகளில் விசாரணை முடித்தான் வெறும் 17,313 தண்டனை 4708 அப்படியென்றால் வெறும் 3.01% தான் தண்டனை வெறும் 11.07% தான் வழக்கு முடிவு???இந்த அழகில் 7 வருடமாக நிர்பயா வழக்கு முடிவு வரவில்லை, ஒருத்தன் செத்தான், இன்னொருத்தனை 17 வருடம் 4 மாதம் ஆகவே மைனர் என்று விடுதலை அவன் முஸ்லிமாதலால் மீதி 4 பேர் தூக்கு தொங்கிட்டு இருக்கு இன்னும்.
Rate this:
Share this comment
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
10-ஜன-202011:20:11 IST Report Abuse
Divahar 27 % தான் பாலியல் குற்றங்கள் பெருக காரணம் . போலீசும் இதற்கு காரணமாக இருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
10-ஜன-202010:31:09 IST Report Abuse
ஆப்பு ஆனா சட்டம், ஒழுங்கு சீர் குலைந்து வருதுன்னு ஜனாதிபதி, தலைமை நீதிபதி எல்லோரும் கவலை தெரிவிப்பாங்க. கொடூர குற்றவாளிகள் நாலுபேரைத் தண்டிக்க 7 வருஷம் எடுத்துக்கிட்ட நாடு நம்ம நாடு. இன்னும் மவுலிவாக்கம், பொள்ளாச்சி குற்றவாளிகள் பாதுகாப்பா ஜெயிலில் இருக்காங்க. தஷ்வந்த் இருக்காக...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X