பலாத்கார வழக்குகளில் தண்டனை விதிப்பு 27.7% தான்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பலாத்கார வழக்குகளில் தண்டனை விதிப்பு 27.7% தான்

Updated : ஜன 10, 2020 | Added : ஜன 10, 2020 | கருத்துகள் (7)
rape,GangRape,judgement,rape_case,பலாத்காரம்,வழக்கு,தண்டனை

புதுடில்லி: நிர்பயா வழக்கில், நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு, பாலியல் பலாத்கார வழக்குகளில், 27.7 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

என்.சி.ஆர்.பி., எனப்படும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த, 2018ம் ஆண்டில் மட்டும், 1 லட்சத்து, 56 ஆயிரத்து, 327 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 17 ஆயிரத்து, 313 வழக்குகளில் விசாரணை முடிந்து, 4,708 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து, 133 வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். 1,472 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.





கடந்த, 2017ல், 32.2 சதவீத பாலியல் பலாத்கார வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு உள்ளன. 2017ல், 18 ஆயிரத்து, 99 வழக்குகளில் விசாரணை முடிந்து, 5,822 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X