சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விருதையில் ஆக்கிரமிப்பு அகற்றம்: சப் கலெக்டர் அதிரடி நடவடிக்கை

Added : ஜன 10, 2020
Advertisement
 விருதையில் ஆக்கிரமிப்பு அகற்றம்: சப் கலெக்டர் அதிரடி நடவடிக்கை

விருத்தாசலம்:விருத்தாசலம் உழவர் சந்தை, பஸ் நிலையம் மற்றும் ஜங்ஷன் சாலையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அபராதம் விதித்து, சப் கலெக்டர் உத்தரவிட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலத்தில் பஸ் நிலையம், தென்கோட்டைவீதி, சன்னதி வீதி, கடைவீதி, ஜங்ஷன் ரோடு ஆகிய பகுதிகள் ஆக்கிரமிப்பு அதிகரித்து பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் பலமுறை செய்தி வெளியிட்டும், அதிகாரிகள் கண்டும் காணாமல் செல்வதால் போக்குவரத்து பாதிப்பதுடன், விபத்து அதிகரித்தது.இந்நிலையில், விருத்தாசலம் சப் கலெக்டர் பிரவீன்குமார், உழவர் சந்தையில் நேற்று காலை 7:30 மணியளவில் திடீர் ஆய்வு நடத்தினார்.அப்போது, வாடகை பெற்ற இடத்தை மாற்று நபருக்கு உள்வாடகைக்கு விட்டு, சாலையை ஆக்கிரமித்து, பழம், கீரைகள், காய்கறிகளை விற்பது தெரிய வந்தது.
அவர்களை எச்சரித்த சப் கலெக்டர், சாலையில் குவிந்திருந்த கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.தொடர்ந்து, பாலக்கரையில் இருந்து பஸ் நிலையம் வரை சென்ற அவர், அப்பகுதியில் சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த ெஷட்டுகள், தகர கொட்டகைகள், அனுமதியில்லாத தள்ளுவண்டிகள், பெட்டிக்கடைகள் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தினார்.சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள் உடைத்து அகற்றப்பட்டன. பஸ் நிலைய வளாகத்தில் சுகாதார சீர்கேடான கடைகளின் உரிமத்தை ரத்து செய்யவும், பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்கள் நுழைவதை தடுக்கவும் அறிவுறுத்தினார்.
அங்கு, தண்ணீரின்றி பாழாகி வரும் நம்ம டாய்லெட் திட்ட கழிவறைகளை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.முன்னதாக, ஜங்ஷன் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு ஏற்படுத்தியிருந்த கடைகளின் உரிமையாளர்கள் 5 பேருக்கு 5,000 மற்றும் 10,000 வீதம் அபராதம் விதித்தார். அப்போது, நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டு, துப்புரவு அலுவலர் குமார், ஆய்வாளர் ஷியாம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X