பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பு எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

Added : ஜன 10, 2020
Advertisement
 பொங்கல் பரிசு தொகுப்பு எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
விருத்தாசலம் வி.சி.எம்.எஸ்., சார்பில் ஆயியார்மடம் ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு, சப் கலெக்டர் பிரவீன் குமார் தலைமை தாங்கினார். துணை ஆட்சியர் ஞானவேலு, கூட்டுறவு சார் பதிவாளர் சிவகுருநாதன், சங்கத் தலைவர் சேகர், தாசில்தார்கள் கவியரசு, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மேலாண் இயக்குனர் கனகவள்ளி வரவேற்றார்.கலைச்செல்வன் எம்.எல்.ஏ., 1,056 பயனாளிகளுக்கு தலா 1,000 ரொக்கம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.
முன்னாள் சேர்மன் அருளழகன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மணிவண்ணன், நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், நடராஜன், அருண், ரவி, அரப்ஷா உட்பட பலர் பங்கேற்றனர்.ஆலிச்சிகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் ராமு தலைமையில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ., பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். துணைத் தலைவர் நெடுமாறன், ஊராட்சி தலைவர் சின்னபிள்ளை பெருமாள், சங்க செயலர் தேவராஜன், முன்னாள் தலைவர் காசிநாதன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X