பொது செய்தி

தமிழ்நாடு

எள் சாகுபடியில் அதிக மகசூல்; பிரதமரிடம் விருது பெற்ற பெண்

Added : ஜன 10, 2020 | கருத்துகள் (3)
Advertisement
எள்,சாகுபடி,அதிக_மகசூல்,பிரதமர்,விருது

நாமக்கல் : எள் சாகுபடியில் அதிக மகசூல் ஈட்டிய, நாமக்கல் மாவட்டததை சேர்ந்த பெண் விவசாயி, பிரதமரிடம் விருது பெற்றார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஒன்றியம், சீராப்பள்ளி ஊராட்சி, குஞ்சாம்பாளையத்தை சேர்ந்தவர், பாப்பாத்தி, 61. ஜெயா, ரமேஷ் என, இரு பிள்ளைகள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன், அவரது கணவர் பொன்னுசாமி உயிரிழந்தார்.இதையடுத்து, கணவர் மேற்கொண்ட விவசாயத்தை, பாப்பாத்தி தொடர்ந்தார். 2017 - 18ல், 1 ஹெக்டேர் நிலத்தில், இயற்கை முறையில், எள் சாகுபடி செய்தார். வேளாண் துறை ஆலோசனைப்படி, எண்ணெய் வித்து பயிரான எள் சாகுபடி மேற்கொண்டதில், 1,210 கிலோ அறுவடை செய்தார். அதிகளவில் மகசூல் எடுத்த விபரம் அறிந்த, சக விவசாயிகள் ஆச்சரியப்பட்டனர்.

இது தொடர்பாக, வேளாண் துறையினர், தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். தமிழக அரசு, மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரை செய்தது. அதையடுத்து, கர்நாடக மாநிலம், தும்கூரில், 2ம் தேதி நடந்த விழாவில், விவசாயி பாப்பாத்திக்கு, 'கிரிஷி கர்மான்' என்ற, முன்னோடி விவசாயி விருது மற்றும் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை ஆகிவற்றை, பிரதமர் மோடி வழங்கினார்.

பாப்பாத்தி கூறுகையில், ''வேளாண் துறையினர் ஆலோசனைப்படி, எள் சாகுபடி செய்தேன். அதனால் தான், நல்ல மகசூல் கிடைத்தது. இந்த விருது, மேலும் சாதிப்பதற்கு உந்துதலாகவும் அமைந்துள்ளது. விவசாயத்தை தொடர்ந்து மேற்கொள்வேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
10-ஜன-202021:57:31 IST Report Abuse
THINAKAREN KARAMANI விவசாயி பாப்பாத்தியம்மாளுக்கு நல்வாழ்த்துக்கள். வேளாண் துறையினர் ஆலோசனைப்படி விவசாயம் செய்தேன் என்றால் அவர்களின் ஆலோசனைப்படி உரம், பூச்சிமருந்து என்று உபயோகப்படுத்தி நல்ல மகசூல் பார்த்தார்கள் என்று அர்த்தம். எனவே விருது பெற்ற இந்த விவசாயி அம்மாள் சொல்படி மற்ற விவசாய பெருமக்களும் வேளாண் துறையினர் ஆலோசனையை பின்பற்றி நல்ல விளைச்சல் கண்டு நாட்டை முன்னேற்றலாம். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Share this comment
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
10-ஜன-202014:09:37 IST Report Abuse
Sankar Ramu வாழ்த்துக்கள் இயற்கை விவசாயத்தை பலரும் செய்ய ஆவல்.
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
10-ஜன-202011:14:25 IST Report Abuse
vasumathi வாழ்த்துக்கள். வேளாண்மை துறை அதிகாரிகள் பெயரையும் சேர்த்து போட்டால் நல்ல ஊக்கமாக இருக்கும். அவர்கள் தானே நல்ல அறிவுரை கொடுத்தார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X