டில்லியில் மாணவர்கள் பேரணி

Added : ஜன 10, 2020
Advertisement

புதுடில்லி: டில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் சமீபத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இதில் 35 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் பல்கலையில் நடந்த வன்முறைக்காக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிஇடதுசாரி மாணவர் அமைப்புகள் நேரு பல்கலை மாணவர் சங்கம் பேராசிரியர்கள் சங்கம் ஆகியவை சார்பில் டில்லியில் நேற்று பேரணி நடந்தது. பேரணியில் 'குடியுரிமை திருத்த சட்டம் வேண்டாம். தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம்' என கோஷங்கள் எழுப்பட்டன. பேரணியில் மார்க்சிஸ்ட் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ்கரத், பிருந்தா கரத், இந்திய கம்யூ. தேசிய செயலர் டி.ராஜா. உட்பட பலர் பங்கேற்றனர்.மனித வள மேம்பாட்டு அமைச்சக அலுவலகம் உள்ள சாஸ்திரி பவன் கட்டடம் அருகே பேரணியில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் பல்கலை மாணவர் சங்கம், பேராசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் மட்டும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகளை சந்திக்க போலீசார் அனுமதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X