பொது செய்தி

தமிழ்நாடு

மறு ஓட்டு எண்ணிக்கை கோரி கலெக்டரிடம் வேட்பாளர் மனு

Added : ஜன 10, 2020
Advertisement

கடலுார்:வடக்கு வெள்ளூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தக் கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வடக்கு வெள்ளூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஜெயராணி கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு விவரம்;வடக்கு வெள்ளூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எனக்கு ஆட்டோ சின்னமும், எனக்கு எதிராக போட்டியிட்ட மலர்விழிக்கு பூட்டுசாவி சின்னமும் ஒதுக்கப்பட்டது. ஊராட்சியில் 3,901 ஓட்டுகள் பதிவானது.கடந்த 2ம் தேதி நடந்த ஓட்டு எண்ணிக்கையின்போது மலர்விழியின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிவான ஓட்டுக்களில் எனக்கு 85 செல்லாதவையாகவும், மலர்விழிக்கு 13 செல்லாதவையாகவும் அறிவித்தனர்.இருப்பினும் நான் 6 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தேன். வாக்கு எண்ணிக்கை அதிகாரிகள் இருந்த அறையில் 2 பேர் மலர்விழியின் உறவினர் என்பதால் வாக்குகளை திருத்தம் செய்து ஒரு ஓட்டில் மலர்விழி வெற்றிபெற்றதாக அறிவித்தனர்.இது குறித்து தேர்தல் அலுவலர்களிடம் முறையிட்டேன்.தபால் ஓட்டுக்களில் எனக்கு ஒன்றும், மலர்விழிக்கு 4 ஓட்டுகளும் கிடைத்ததாக கூறினார். ஆனால், தபால் ஓட்டுக்களை எண்ணிடம் காண்பிக்கவில்லை. கடந்த 4ம் தேதி மாநில தேர்தல் ஆணையத்தில் தேர்தல் முடிவை ரத்து செய்யுமாறு கூறினேன்.எனவே தேர்தல் முடிவை ரத்து செய்து, மீண்டும் மறு எண்ணிக்கை நடத்தி வெற்றி பெற்றவரை அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X