ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புக்கு 'சாப்ட்வேர்' தயாரித்த பயங்கரவாதிகள்

Added : ஜன 10, 2020
Advertisement

சென்னை: பெங்களூரில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மூவரும் பிரத்யேக மென்பொருள் தயாரித்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் முகமது ஹனீப்கான் 29; இம்ரான் கான் 32; முகமது ஜெயித் 24. பயங்கரவாதிகளான இவர்கள் தமிழகம் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வந்தனர்.

இவர்கள் மூவரையும் தமிழக 'கியூ' பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களில் முகமது ஜெயித் பி.டெக். படித்துள்ளார். இவர் பிரத்யேமாக மென்பொருள் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த மென்பொருளை பயங்கரவாதிகள் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர்.இதன் வாயிலாக முகமது ஜெயித் உள்ளிட்ட மூவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பில் இருந்துள்ளனர். இவர்களின் எதிர்கால சதி திட்டம் குறித்தும் மத்திய மாநில உளவு போலீசார் கண்டுபிடிக்க முடியாத வகையில் அந்த பிரத்யேக மென்பொருள் அமைந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க மூன்று பேரையும் ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் 4 பேர் சிக்கினர்குடியரசு தினத்தன்று டில்லி மற்றும் உ.பி.யில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பாக டில்லி சிறப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நேற்று டில்லியில் பதுங்கியிருந்த சையது அலி நவாஸ் 25; அப்துல் சமீம் 25; காஜா மொய்தீன் 47 ஆகியோரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

இவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. மேலும் 2014ல் ஹிந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இவர்களை தமிழக போலீசார் சென்னைக்கு அழைத்து வர முடிவு செய்துள்ளனர். அதேபோல குஜராத் மாநிலம் வதோதரா நகரில் பதுங்கியிருந்த கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஜாபர் அலி என்பவரையும் அம்மாநில போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X