பொது செய்தி

தமிழ்நாடு

பனிக்கன்குப்பம் - கீழிருப்பு பாலம் திறக்க நடவடிக்கை தேவை

Added : ஜன 10, 2020
Advertisement
 பனிக்கன்குப்பம் - கீழிருப்பு பாலம் திறக்க நடவடிக்கை தேவை

பண்ருட்டி:பனிக்கன்குப்பம்- கீழிருப்பு இடையிலான உயர் மட்ட பாலத்திற்கான கான்கிரீட் பணிகள் முடிந்துள்ளதால், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம்- கீழிருப்பு இடையிலான உயர்மட்ட பாலம் கட்டும் பணி, ரூ.2 கோடி மதிப்பீட்டில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், கடந்த 8 மாதங்களுக்கு முன் துவங்கியது. 7 மீட்டர் அகலத்தில் 60 மீட்டர் நீளத்தில் காட்டாறு பகுதியில் உயர்மட்ட பாலம் பணிகள் நடந்து முடியும் தருவாயில் உள்ளது.பணி காலம் 6 மாதம் முடிந்து கூடுதல் அவகாசத்தில் பணிகள் நடந்து வருகிறது.இப்பணியை விரைவு படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X