கைப்பந்து அணி வீரர்கள் தேர்வு கடலுாரில் நாளை நடக்கிறது

Added : ஜன 10, 2020
Advertisement

கடலுார்;மாவட்ட அளவிலான கைப்பந்து அணிக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்வதற்கான போட்டி கடலுார் அண்ணாவிளையாட்டு அரங்கில் நாளை மதியம் 2:30 மணியளவில் நடக்கிறது.
இதில் பங்கு பெற விரும்புவோர் 1.1.2002ல் பிறந்தவராக இருக்கவேண்டும். போட்டிக்கு வரும்போது, ஆதார் அட்டை, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் இதில் ஏதேனும் ஓன்றை கொண்டு வரவேண்டும். தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் கடலுார் மாவட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, திருவாரூர் மாவட்டத்தில் வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கு பெறுவர்.இத்தகவலை மாவட்ட கைப்பந்து கழக தலைவர் புவனேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X