சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருமகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த மாமியார் கைது

Added : ஜன 10, 2020
Advertisement

பெண்ணாடம்:பெண்ணாடம் அருகே மருமகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த மாமியாரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கணவர், சகோதரியை தேடி வருகின்றனர்.
பெண்ணாடம் அடுத்த காரையூர் குப்புசாமி மகன் மகேஸ்வரன், 33. இவருக்கும் விருத்தாசலம் அடுத்த பரவளூர் ராமநாதன் மகள் திவ்யபாரதிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மகேஸ்வரன் தனது மனைவி திவ்யபாரதியுடன் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வாடகை வீட்டில் வசித்தார். அப்போது, இருவருக்கும் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. மனமுடைந்த திவ்யபாரதி கடந்த மாதம் பரவளூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார்.
கடந்த 5ம் தேதி திவ்யபாரதியின் பெற்றோர் சமாதானம் செய்து, காரையூர் அனுப்பி வைத்தனர். பின்னர், மகேஸ்வரன் மற்றும் அவரது தாய் ராஜநளினி, 53, மகேஸ்வரனின் சகோதரி உமா மகேஸ்வரி ஆகியோர் திவ்யபாரதியிடம், 8 லட்சம் ரூபாய், 5 சவரன் நகை ஆகியவற்றை உனது பெற்றோரிடம் வரதட்சணையாக வாங்கி வருமாறு கேட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து திவ்யபாரதி கொடுத்த புகாரின் பேரில், ராஜ நளினி உட்பட மூவர் மீது பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜ நளினியை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X