பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Added : ஜன 10, 2020
Advertisement

கடலுார்:மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களை உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்க, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான தகுதிகள், தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிப்பவர்களாக இருக்கவேண்டும்.குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் குறித்து தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் கலெக்டர் அலுவலத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X