தமிழ்நாடு

தொடர்கிறது: வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்: மாவட்ட வருவாய் அலுவலரை மாற்றக்கோரி

Added : ஜன 10, 2020
Advertisement

ராமநாதபுரம்:மாவட்ட வருவாய் அலுவலரை மாற்றக்கோரி வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் (ஜன.8) தொடங்கிய காத்திருப்பு போராட்டம் நேற்று பகல் 12:00 மணி வரை தொடர்ந்தது. இன்றும் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரியை இடமாற்றக்கோரி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வருவாய் அலுவலர் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வருவாய் துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் காலை வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.

வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார் தலைமை வகித்தார். அனைத்து தாலுகாக்களில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய்த்துறை ஊழியர்களும் மாவட்ட வருவாய் அலுவலரை மாற்றக்கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையிலும் மதியம் 12:00 மணி வரை போராட்டம் நீடித்தது.இது குறித்து மாவட்ட செயலர் தமீம்ராஜா கூறியதாவது:காத்திருப்பு போராட்டம் இன்றும் (ஜன.10) தொடரும். மாநில நிர்வாகிகள் வருவாய்துறை அமைச்சரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஜன.13ல் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநில தலைவர் குமரேசன், பொது செயலர் முருகையன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். வருவாய்துறை அலுவலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வருவாய்துறை சார்ந்த பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X