பொது செய்தி

தமிழ்நாடு

கீரப்பாளையத்தில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி

Added : ஜன 10, 2020
Share
Advertisement
 கீரப்பாளையத்தில்  பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி

புவனகிரி:கீரப்பாளையத்தில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கீரப்பாளையம் தொடக்க வேளாண் கடன் சங்கத்தின் கீழ் உள்ள 7 ரேஷன் கடைகளில் 2 ஆயிரத்து 814 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர்.தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி கீரப்பாளையத்தில் நடந்தது. விற்பனையாளர் உமாமகேஸ்வரி வரவேற்றார். வங்கி செயலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
வங்கித் தலைவர் சரவணன் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு 29 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். வங்கி இயக்குனர்கள் கபிலன், திருநாராயணன், மணிமேகலை, ராமலிங்கம், முருகானந்தம், மணி, மாவட்ட துணை செயலர் முருகுமணி, மாவட்ட மாணவரணி தலைவர் வீரமுத்து, அவை தலைவர் ராஜ்குமார், பேரவைச் செலயர் பாலமுருகன், கிளை செயலர் சிவக்குமார், உட்பட பலர் பங்கேற்றனர்.பிரபு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X