பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தி எதிரொலிபுதிய தரைப்பாலம்

Added : ஜன 10, 2020
Advertisement
 தினமலர் செய்தி எதிரொலிபுதிய தரைப்பாலம்

உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை அருகே எக்ககுடி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் தாழ்வாக இருப்பதால் மழை காலங்களில் நீரில் மூழ்கி விடும்.

இவ்வழியாக உத்தரகோசமங்கை, நல்லாங்குடி, எக்ககுடி, கொத்தங்குளம், புத்தேந்தல் உள்ளிட்ட கிராமங்களுக்குசெல்லும் பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.இதுகுறித்து தினமலர் நாளிதழில் சமீபத்தில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக 100 மீ., நீளத்தில் 2 அடி உயர்த்தப்பட்டு துாம்பு பாலம் புதியதாக கட்டும் பணிகள் நிறைவடைந்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

கிராம மக்கள் கூறுகையில், சமீபத்தில் பெய்த கன மழையில் கொத்தங்குளம் கண்மாய் நிரம்பியுள்ள நிலையில் புதிய தரைப்பாலத்தின் வழியாக வெள்ள நீர் சென்றது. தற்போது போக்குவரத்து எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் பயனுள்ளதாக உள்ளது. தினமலர் நாளிதழுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X