பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பாதிரிப்புலியூரில் நோய் பரவும் அபாயம்

Added : ஜன 10, 2020
Advertisement
 திருப்பாதிரிப்புலியூரில் நோய் பரவும் அபாயம்

கடலுார்:கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வள்ளியம்மை நகரில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலுார் சரவணா நகர்-நத்தவெளி சாலை இணைப்பு சாலையோரம் வள்ளியம்மை நகர், ஸ்ரீதேவி நகர், தண்டபாணி நகர் உட்பட பல்வேறு நகர்கள் உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.இப்பகுதி குடியிருப்புகளை சுற்றி கடந்த 2 மாதங்களாக மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில், பாசிக்கள் படர்ந்து, வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.
கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தை பார்வையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படுகிறது. வேறு வழியின்றி வசிக்கிறோம். நகராட்சி அதிகாரிகள் இனியாவது தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X