பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் பல்லாங்குழியான சாலைகள் கடலுாரில் வாகன ஓட்டுனர்கள் அவதி

Added : ஜன 10, 2020
Advertisement
 மீண்டும் பல்லாங்குழியான சாலைகள் கடலுாரில் வாகன ஓட்டுனர்கள் அவதி

கடலுார்:கடலுார் நகரில் பெரும்பாலான சாலைகள் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கடலுார் நகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், சாலைகள் தரமான முறையில் அமைக்கப்படுவதில்லை. இதனால், அடிக்கடி சாலை சீரமைப்பு பணி நடைபெறுவதும், மீண்டும் பள்ளமாக மாறுவதும் வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக, பிரதான சாலைகளின் நிலை மோசமாக உள்ளது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சங்கர நாயுடு தெரு (போலீஸ் நிலையம் எதிரில்) நத்தவெளி ரோடு, கம்மியம்பேட்டை- ஜவான்ஸ்பவன் இணைப்பு சாலை உட்பட பல்வேறு இடங்களில் ஏற்கனவே சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையில் இருந்தது.
இந்நிலையில், சமீபத்திய மழை காரணமாக இந்த சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்து மீண்டும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பதற்கான அறிகுறி தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.பள்ளி, அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சாலைகளை நிரந்தரமாக சீரமைக்க தீர்வு காண வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X